வீடு / சமையல் குறிப்பு / திரி கிரீன் சூப்

Photo of Three green soup by Krishnasamy Vidya Valli at BetterButter
375
2
0.0(0)
0

திரி கிரீன் சூப்

Jul-03-2018
Krishnasamy Vidya Valli
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

திரி கிரீன் சூப் செய்முறை பற்றி

மூன்று பச்சை நிற சத்தான பொருட்களை வைத்து எளிதில் செய்யும் ஆரோக்கியமான சூப் வெரைட்டி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. நெல்லிக்காய் 2
  2. பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா தலா 1 மேஜைக்கரண்டி
  3. வெண்ணெய் அரை தேக்கரண்டி
  4. சீரகம் அரை தேக்கரண்டி
  5. பட்டை ஒரு சிறிய துண்டு
  6. ஏலக்காய் கிராம்பு தலா ஒன்று
  7. உப்பு கால் தேக்கரண்டி
  8. மிளகு பொடி கால் தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. நெல்லிக்காயை அளவுவாக தண்ணீர் விட்டு வேக வைத்து கொட்டை நீக்கி கொள்ளவும்
  2. கடாயில் வெண்ணெய் சேர்த்து சீரகம் பட்டை ஏலக்காய் கிராம்பு தாளித்து வேக வைத்த நெல்லிக்காய் கொத்தமல்லி கருவேப்பிலை புதினா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. ஆற வைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  4. அரைத்த விழுதை சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
  5. மிளகுப் பொடி தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்