வீடு / சமையல் குறிப்பு / துளசி தூதுவளை ஹாட் டிரிங்க்

Photo of Tulasi thoothuvalai  hot drink by Krishnasamy Vidya Valli at BetterButter
468
1
0.0(0)
0

துளசி தூதுவளை ஹாட் டிரிங்க்

Jul-03-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

துளசி தூதுவளை ஹாட் டிரிங்க் செய்முறை பற்றி

காலை மாலை இரண்டு நேரத்திலும் குடிக்கலாம் . உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக சளி இருமல் தொண்டை வலி நேரங்களில் காபி/டீ க்கு பதில் இதை குடிக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. துளசி இலை -10 முதல் 15
  2. தூதுவளை இலை -20 முதல் 25
  3. கருப்பட்டி பொடித்தது 2 மேஜைக்கரண்டி
  4. மிளகு -1/2 தேக்கரண்டி
  5. சுக்கு -1 துண்டு
  6. தனியா -1/2 தேக்கரண்டி
  7. அக்கரா -1 சிறிய துண்டு(விருப்பப்பட்டால்)
  8. சித்தரத்தை -1 சிறிய துண்டு(விருப்பப்பட்டால்)
  9. அதிமதுரம் -1 சிறிய துண்டு(விருப்பப்பட்டால்)
  10. திப்பிலி -சிறிது (விருப்பப்பட்டால்)

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு துளசி தூதுவளை கருப்பட்டி சேர்த்து ஒரு கொதி விடவும்
  2. கொடுக்கப்பட்ட மற்ற பொருட்களை உரலில் ஒன்று இரண்டாக தட்டிக் கொள்ளவும்
  3. இதை ஏற்கனவே கொதித்ததுடன் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும்
  4. பாதியளவு தண்ணீர் வற்றியதும் அடுப்பை அணைத்துவிட்டு சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்