வீடு / சமையல் குறிப்பு / கம்பு வெந்தயக்கீரை காக்ரா

Photo of Bajra Methi Khakra by Sowmya Sundar at BetterButter
340
0
0.0(0)
0

கம்பு வெந்தயக்கீரை காக்ரா

Jul-13-2018
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கம்பு வெந்தயக்கீரை காக்ரா செய்முறை பற்றி

கம்புமாவு மற்றும் வெந்தயக்கீரை சேர்தது செய்த கரகரப்பான எண்ணெய் இல்லாத ஸ்னாக் இது.மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட ஏற்றது .கம்புமாவு மற்றும் வெந்தயக்கீரை சேர்த்து இருப்பதால் ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கம்புமாவு-1 கப்
  2. கோதுமை மாவு-2 டேபிள் ஸ்பூன்
  3. வெந்தயக்கீரை-1 கட்டு
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்
  6. மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
  7. மிளகாய் தூள்-1 டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. அதில் சிறிது தண்ணீர் விட்டு நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  3. மாவை உருண்டைகளாக உருட்டி மாவு தொட்டு முடிந்தவரை லேசாக தேய்த்து கொள்ளவும்
  4. தோசை கல் காய்ந்ததும் சிம்மில் வைத்து காக்ராவை அதில் போட்டு ஒரு துணியால் லேசாக அழுத்தி கொடுத்தபடி அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக இரண்டு பக்கமும் வேக விடவும். சப்பாத்தி போல எண்ணெய் விட கூடாது.
  5. இதே போல அனைத்தையும் செய்து கொள்ளவும். இது ஆறியதும் கிரிஸ்பி ஆக ஆகிவிடும்.டைட்டான டப்பாவில் போட்டு வைத்து கொண்டு பதினைந்து நாட்கள் வரை பயன்படுத்தலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்