வீடு / சமையல் குறிப்பு / தானிய கொழுக்கட்டை

Photo of Dhaniya kozhukattai by Krishnasamy Vidya Valli at BetterButter
483
2
0.0(0)
0

தானிய கொழுக்கட்டை

Aug-12-2018
Krishnasamy Vidya Valli
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

தானிய கொழுக்கட்டை செய்முறை பற்றி

புரதச்சத்து அதிகமுள்ள ராஜ்மா கொண்டைக் கடலை பச்சைப் பயறு மொச்சை சோயா மற்றும் எல்லா வகையான தானியங்களும் சேர்த்து செய்யும் எண்ணெய் அதிகமில்லா ஆரோக்கியமான கொழுக்கட்டை இது. ஒருவருக்கு இரண்டு வீதம் ஆறு நபர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. ராஜ்மா சோயா கொண்டைக்கடலை பச்சைப் பயறு மொச்சை மற்றும் விருப்பமான தானியங்கள் எல்லாம் சேர்த்து அரை கப்
  2. அரிசி மாவு அரை கப்
  3. உப்பு ஒரு தேக்கரண்டி
  4. காரப்பொடி 3/4 தேக்கரண்டி
  5. தேங்காய் துருவல் 1/8 கப்
  6. தாளிக்க தேவையானவை
  7. தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  8. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  9. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  10. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. கடலை/தானிய வகைகள் எல்லாவற்றையும் 2 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. மாஷர் உதவியுடன் நன்றாக மசித்துக் கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து மசித்தவற்றை சேர்த்து கிளறவும்
  4. பாதி அளவு உப்பு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்
  5. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு மீதி உள்ள உப்பு காரப் பொடி மற்றும் தேவையான அளவு வெந்நீர் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  6. அதோடு வதக்கிய தானியங்களை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  7. கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்
  8. தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்