வீடு / சமையல் குறிப்பு / ப்ளு பெர்ரி சீஸ் கேக்

Photo of Blueberry cheesecake by khadheeja irfana at BetterButter
519
0
0.0(0)
0

ப்ளு பெர்ரி சீஸ் கேக்

Aug-14-2018
khadheeja irfana
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
180 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

ப்ளு பெர்ரி சீஸ் கேக் செய்முறை பற்றி

எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு யம்மியான டெஸர்ட்...

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஐரோப்பிய
  • விஸ்கிங்
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. டைஜஸ்டிவ் பிஸ்கட்ஸ் நொறுக்கியது - 2 கப்
  2. வெண்ணை உருகியது - அரை கப்
  3. சீனி பொடித்தது - 4 மேஜைக்கரண்டி
  4. கட்டியான கிரீம் - 90ml
  5. க்ரீம் சீஸ் - 125 கிராம்
  6. கண்டன்ஸ்டு மில்க் - அரை டின்
  7. வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
  8. ஜெலட்டின் பவுடர் - 2 தேக்கரண்டி
  9. தண்ணீர் கொதிக்க வைத்தது - 2 மேஜைக்கரண்டி
  10. குளிர்ந்த தண்ணீர் - ஒரு மேசை கரண்டி
  11. ப்ளூபெர்ரி - 2 கப்
  12. தேன் - 2 1/2 மேஜைக்கரண்டி
  13. தண்ணீர் - 3 மேஜைக்கரண்டி
  14. பட்டைத்தூள் - 1/4 தேக்கரண்டி
  15. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ப்ளூபெர்ரி compote செய்யும் முறை: ஒரு அடி கனமான பேனில் ஒரு கப் ப்ளூபெர்ரி தண்ணீர் தேன் மற்றும் பட்டை தூள் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
  2. நன்கு கொதி வந்ததும் ஒரு 10 நிமிடம் மூடி போட்டு மிதமான சூட்டில் வேக விடவும்.
  3. ப்ளூ பெர்ரி பழங்கள் நன்கு வெந்ததும் அதனை நன்கு மசித்து மீதமுள்ள ஒரு கப் ப்ளூபெர்ரியை அதனோடு சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
  4. ஒரு திக்கான பதம் வந்ததும் அதன் மேல் எலுமிச்சை சாறு ஊற்றி அடுப்பை அணைத்து விடவும். ப்ளூபெர்ரி compote ரெடி. இது நன்கு ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
  5. சீஸ் கேக் செய்முறை: முதலில் டைஜஸ்டிவ் பிஸ்கட்டை ஒரு கவரில் போட்டு அதனை பொடியாக நொறுக்கிக் கொள்ளவும்.
  6. அதனோடு பொடித்த சீனி மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து வைத்து அதனை 20 cm loose bottom கேக் டின்னில் base பகுதியில் சமமாக அழுத்தி பரப்பி விடவும். பின்னர் இதனை 20 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
  7. ஒரு கண்ணாடி பவுலில் திக் க்ரீம் சேர்த்து அதனை ஐந்து நிமிடம் பீட்டர் கொண்டு மெதுவாக கட்டியாக ஆகும் வரை நன்கு அடித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
  8. அடுத்து இன்னொரு பவுலில் க்ரீம் சீஸ், கண்டென்ஸ்டு மில்க் மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து பீட்டர் கொண்டு நன்றாக மெதுவாக ஆகும் வரை அடித்துக் கொள்ளவும்.
  9. ஏற்கனவே அடித்து வைத்த திக் க்ரீமை கிரீம் சீஸ் கலவையோடு சேர்த்து மிதமான ஸ்பீடில் பீட்டர் கொண்டு அடித்து ஒன்றாக சேர்க்கவும்.
  10. குளிர்ந்த தண்ணீரில் ஜெலட்டினை போட்டு அதனை நன்கு கலந்து ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் அதன் மேல் கொதிக்கும் தண்ணீரை ஊற்றவும்.
  11. இந்த ஜெலட்டின் கலவையை க்ரீம் சீஸ் கலவையோடு சேர்த்து நன்றாக கலக்கவும்.
  12. தயார் செய்த கிரீம் சீஸை கேக் டின்னில் டைஜஸ்டிவ் பிஸ்கட் crumble மேல் சமமாக பரப்பவும்.
  13. அதன்மேல் ப்ளூபெர்ரி கம்போர்ட் சேர்த்து அலங்கரிக்கவும்.இதனை 3 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பின்னர் பரிமாறவும்.
  14. சுவையான ப்ளூபெர்ரி சீஸ் கேக் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்