வீடு / சமையல் குறிப்பு / அரிசி உப்புமா புளி பஜ்ஜி மிளகாய்

Photo of Rice uppuma tamarind baji milagai by Krishnasamy Vidya Valli at BetterButter
451
1
0.0(0)
0

அரிசி உப்புமா புளி பஜ்ஜி மிளகாய்

Aug-16-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அரிசி உப்புமா புளி பஜ்ஜி மிளகாய் செய்முறை பற்றி

ஆறினாலும் இந்த அரிசி உப்புமா நன்றாக இருக்கும்.தொட்டுக்கொள்ள புளிமிளகாய் இருந்தால் நன்றாகவே இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி ஒரு கப்
  2. துவரம்பருப்பு /பாசிப்பருப்பு இரண்டு தேக்கரண்டி
  3. மிளகாய்வற்றல் 3 அல்லது மிளகு ஒரு தேக்கரண்டி
  4. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  5. உப்பு முக்கால் தேக்கரண்டி
  6. தாளிக்க தேவையானவை
  7. தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  8. கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தலா ஒரு தேக்கரண்டி
  9. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  10. தேங்காய்த்துருவல் 2 தேக்கரண்டி
  11. பச்சை மிளகாய் ஒன்று
  12. புளி பஜ்ஜி மிளகாய்க்கு தேவையானவை
  13. பொடியாக நறுக்கிய பஜ்ஜி மிளகாய் 3/4 கப்
  14. புளி 1நெல்லிக்காய் அளவு
  15. உப்பு 3/4 தேக்கரண்டி
  16. மஞ்சள் பொடி 1/8 தேக்கரண்டி
  17. வெல்லம் 1 சிறிய துண்டு
  18. தாளிக்க
  19. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  20. கடுகு வெந்தயம் உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  21. பெருங்காயம் 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. அரிசி பருப்பு உப்பு பெருங்காயம் மிளகாய் வத்தல் அல்லது மிளகு எல்லாம் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து மூன்று கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
  3. திரித்து வைத்ததை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும்
  4. இதை ஒரு பாத்திரத்தில் வைத்து குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்கவும்
  5. புளி பஜ்ஜி மிளகாய்க்கு தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து நறுக்கிய மிளகாய் சேர்த்து வதக்கவும்
  6. புளிக்கரைசல் சேர்த்து உப்பு மஞ்சள் பொடி வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்
  7. கெட்டியானதும் இறக்கவும்
  8. அரிசி உப்புமாவை புளிபஜ்ஜி மிளகாய் உடன் டிபன் பாக்ஸ் பேக் செய்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்