வீடு / சமையல் குறிப்பு / திடீர் பருப்பு சாதம்

Photo of Dal rice by Apsara Fareej at BetterButter
399
0
0.0(0)
0

திடீர் பருப்பு சாதம்

Aug-23-2018
Apsara Fareej
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

திடீர் பருப்பு சாதம் செய்முறை பற்றி

காலையில் குழந்தைகளுக்கு டிஃபன் பாக்ஸிற்கு செய்து கொடுக்க இந்த செய்முறை மிகவும் எளிதாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புழுங்கல் அரிசி - 1 டம்ளர்
  2. பாசிப்பருப்பு - 1/2 டம்ளர்
  3. பெரிய வெங்காயம் - 1
  4. தக்காளி - 1/2
  5. பச்சைமிளகாய் - 2
  6. கொத்தமல்லி தழை மற்றும் புதினா - சிறிதளவு
  7. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  8. நெய் - 1 மேஜைக்கரண்டி
  9. தேங்காய்பால் - 1/2 டம்ளர்
  10. பட்டை - 1 இன்ச் அளவு
  11. ஏலக்காய் மற்றும் கிராம்பு - தலா 2
  12. மஞ்சள்த்தூள் - 1/2 தேக்கரண்டி
  13. கரம்மாசாலாத்தூள் - 1 1/4 தேக்கரண்டி
  14. உப்பு - தேவைக்கேற்ப
  15. இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் அரிசி மற்றும் பருப்பை சேர்த்து போட்டு நன்கு கழுவி விட்டு தண்ணீர் வடிக்கட்டி வைக்கவும்.
  2. வெங்காயம், தக்காளி இவைகளை அரிந்து வைத்துக் கொள்ளவும்.
  3. அரிசி, பருப்பில் அரிந்தவற்றையும், மற்ற அனைத்து பொருட்களையுமே சேர்த்து அத்துடன் இரண்டு ட்ம்ளர் தண்ணீரும் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். உப்பு தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்.
  4. நன்கு கொதிக்கும் போது கிளறி விடவும். தண்ணீர் பாதி சுண்டும் நிலையில் இருக்கும் போது குக்கரை மூடி விடவும். ஸ்டீம் வந்ததும் வெய்ட் போட்டு குறைந்த தீயில் 7 நிமிடங்கள் வைத்து இறக்கவும்.
  5. ஸ்டீம் விட்டதும் திறந்துப் பார்த்தால் அடி பிடிக்காத சூப்பரான, சுலபமான உதிரியான பருப்பு சாதம் ரெடி.
  6. செய்வதும் எளிது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஸ்கூல் மற்றும் ஆஃபிஸ் செல்பவர்களுக்கு ஏற்ற உணவு.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்