வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபுள் மக்ரோனி

Photo of Vegetable Macroni by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
332
3
5.0(0)
0

வெஜிடபுள் மக்ரோனி

Aug-26-2018
Wajithajasmine Raja mohamed sait
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபுள் மக்ரோனி செய்முறை பற்றி

வெஜிடபுள் மக்ரோனி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மக்ரோனி - 1 கப்
  2. வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
  3. தக்காளி - 2 பொடியாக நறுக்கியது
  4. பூண்டு - 3 பல் பொடியாக நறுக்கியது
  5. பட்டாணி - 3 தேக்கரண்டி
  6. கார்ன் - 2 தேக்கரண்டி
  7. பீன்ஸ் -6 பொடியாக நறுக்கியது
  8. கேரட் - 1 பொடியாக நறுக்கியது
  9. காளான் - 3 பொடியாக நறுக்கியது
  10. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  11. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  12. மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
  13. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  14. எண்ணெய் - சிறிதளவு
  15. வெண்ணெய் - 2 தேக்கரண்டி
  16. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் . தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் சிறிதளவு உப்பு 1 கப் மக்ரோனி சேர்த்து வேகவிடவும்.
  3. மக்ரோனி நன்கு வெந்ததும் தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து 2 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டை சேர்த்து வதக்கவும்.
  5. நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. பின்பு தக்காளி சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  7. தக்காளி நன்கு வெந்ததும் மஞ்சள் தூள்,மிளகாய்தூள்,மிளகு தூள், கரம்மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
  8. இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும் .
  9. 11/2 கப் தண்ணீர்சேர்த்து காய்களை நன்கு வேகவிடவும்.
  10. காய் நன்கு வெந்து தண்ணீர் வற்றியவுடன் வேகவைத்துள்ள மக்ரோனியை சேர்க்கவும் .
  11. மக்ரோனியை சேர்த்து காய்கறிகளுடன் 2-3 நிமிடம் நன்கு கிளறி விடவும்.
  12. இப்பொழுது சுவையான வெஜிடபுள் மக்ரோனி தயார். மதிய உணவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை லஞ்ச் பாக்சில் எடுத்துச்செல்லலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்