வீடு / சமையல் குறிப்பு / கத்தரிக்காய் முருங்கைக்காய் சாதம்

Photo of Brinjal drumstick Sadam by Krishnasamy Vidya Valli at BetterButter
422
1
0.0(0)
0

கத்தரிக்காய் முருங்கைக்காய் சாதம்

Aug-28-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கத்தரிக்காய் முருங்கைக்காய் சாதம் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான ரைஸ் லஞ்ச்பாக்ஸ் ரெசிபி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி அல்லது சாப்பாடு பச்சரிசி 2 கப்
  2. கத்திரிக்காய் 4
  3. முருங்கைக்காய் ஒன்று அல்லது இரண்டு
  4. உப்பு ஒன்றரை தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  6. கொத்தமல்லி இலை சிறிது
  7. வறுத்து அரைக்க தேவையானவை
  8. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு தலா 1 மேசை கரண்டி
  9. கட்டிப் பெருங்காயம் சிறிது
  10. மிளகாய்வற்றல் 3
  11. மிளகு 3/4 தேக்கரண்டி
  12. எண்ணெய்-2 டிராப்ஸ்
  13. தேங்காய் பச்சையாக அரைக்கும் பொழுது சேர்த்து கொள்ளவும் 4 மேஜைக்கரண்டி
  14. தாளிக்க தேவையானவை
  15. எண்ணெய் 1 தேக்கரண்டி
  16. கடுகு உளுத்தம் பருப்பு தலா ஒரு தேக்கரண்டி
  17. பெருங்காயம் நான்கு சிட்டிகை
  18. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. அரிசியைக் களைந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. முருங்கைக்காய் தண்ணீர் விட்டு தனியே வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. வறுத்து அரைக்க கொடுத்தவற்றை வறுத்துக் கொள்ளவும்
  4. தேங்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்
  6. முருங்கக்காய் உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்
  7. அரைத்த விழுது சேர்த்து கிளறவும்
  8. சாதம் கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறி இறக்கவும்
  9. அப்பளம்/ சிப்ஸ் அல்லது வத்தல் வடகம் உடன் லஞ்ச்பாக்ஸ் பேக் செய்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்