வீடு / சமையல் குறிப்பு / பிரட் முட்டை மசாலா

Photo of Bread egg masala by Rachell Revathi Samuel at BetterButter
157
1
0.0(0)
0

பிரட் முட்டை மசாலா

Aug-28-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பிரட் முட்டை மசாலா செய்முறை பற்றி

பிரட்டுடன் முட்டை சேர்த்து செய்யப்படும் டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பிரட் 3
  2. வெண்ணெய் 3 ஸ்பூன்
  3. எண்ணெய் 2 ஸ்பூன்
  4. பூண்டு 4 பல்
  5. இஞ்சி சிறிய துண்டு
  6. வெங்காயம் 1
  7. மிளகாய்த்தூள் 3/4 ஸ்பூன்
  8. பட்டை தூள் 1/4 ஸ்பூன்
  9. கரம் மசாலா 1/4 ஸ்பூன்
  10. தக்காளி 1
  11. சர்க்கரை 1/2 ஸ்பூன்
  12. முட்டை 1
  13. மிளகு சீரகத்தூள் 1 ஸ்பூன்
  14. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பிரட்டின் இருபுறமும் வெண்ணெய் தடவி தோசைக் கல்லில் அல்லது பேனில் போட்டு பொன்னிறமாக வரும் வரை காத்திருக்கவும்.
  2. திருப்பி போட்டு 2 புறமும் வேகவிடவும்.
  3. பிரட் டோஸ்ட்களை எடுத்துக் கொள்ளவும்.
  4. சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  5. அடுப்பில் பேனை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பூண்டு சேர்க்கவும்.
  6. நறுக்கிய அல்லது துருவிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.
  7. வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  8. மிளகாய்த்தூள் உப்பு பட்டை தூள் கரம் மசாலா சேர்க்கவும்.
  9. நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  10. தக்காளி நன்றாக வதங்கியதும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
  11. முட்டையை உடைத்து ஊற்றி மிளகு சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
  12. முட்டை நன்றாக வேகும் வரை கிளறவும்.
  13. பிரட் துண்டுகளை சேர்த்து கிளறவும்.
  14. பிரட்டில் மசாலா ஏறும் வரை கிளறி இறக்கவும்.
  15. சுவையான பிரட் முட்டை மசாலா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்