வீடு / சமையல் குறிப்பு / பிரட் உப்புமா

Photo of Bread Upma by Rachell Revathi Samuel at BetterButter
597
1
0.0(0)
0

பிரட் உப்புமா

Aug-28-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பிரட் உப்புமா செய்முறை பற்றி

பிரட் துண்டுகளை வைத்து செய்யும் உப்புமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பிரட் 4
  2. வெண்ணெய் 4 ஸ்பூன்
  3. எண்ணெய் 2 ஸ்பூன்
  4. கடுகு 1/2 ஸ்பூன்
  5. கருவேப்பிலை சிறிது
  6. வெங்காயம் 1
  7. பச்சை மிளகாய் 1
  8. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  9. தக்காளி 1
  10. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
  11. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  12. சர்க்கரை 1/2 ஸ்பூன்
  13. உப்பு தேவையான அளவு
  14. காரட் 1

வழிமுறைகள்

  1. பிரட்டின் 2 புறமும் வெண்ணெய் தடவி வைக்கவும்.
  2. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து அதில் பிரட்டை போட்டு டோஸ்ட் செய்யவும்.இருபுறமும் திருப்பி போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.
  3. டோஸ்ட் செய்த பிரட்டை எடுத்து கொள்ளவும்.
  4. சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சேர்க்கவும்.வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  6. பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  7. நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  8. தக்காளி நன்றாக வதங்கும் வரை வதக்கவும்.
  9. மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சர்க்கரை சேர்த்து கிளறவும்.
  10. துருவிய காரட் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  11. தேவைப்பட்டால் 2 ஸ்பூன் தண்ணீர் விட்டு வேக விடவும்.
  12. காரட் வெந்ததும் நறுக்கிய பிரட் துண்டுகளை சேர்த்து வதக்கி இறக்கவும்.
  13. சுவையான பிரட் உப்புமா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்