பேக்கிங் செய்த மசாலா வடை | Baked Masala Vada in Tamil

எழுதியவர் Neeru Srikanth  |  20th Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Baked Masala Vada by Neeru Srikanth at BetterButter
பேக்கிங் செய்த மசாலா வடைNeeru Srikanth
  • ஆயத்த நேரம்

    2

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    35

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    10

    மக்கள்

929

0

பேக்கிங் செய்த மசாலா வடை recipe

பேக்கிங் செய்த மசாலா வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Baked Masala Vada in Tamil )

  • பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  • உப்பு - சுவைக்கேற்ற அளவு
  • எண்ணெய் – தடவுவதற்கு – 2 தேக்கரண்டி
  • அரிசி மாவு – 1 தேக்கரண்டி
  • வெங்காயம் – 1 நறுக்கப்பட்டது
  • மல்லி – 1 தேக்கரண்டி
  • புதினா – 2 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – கொஞ்சம்
  • ப+ண்டு - 2
  • இஞ்சி – 1 இன்ச்
  • பச்சை மிளகாய் - 3
  • பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
  • கடலை பருப்பு - 1/2 கப்

பேக்கிங் செய்த மசாலா வடை செய்வது எப்படி | How to make Baked Masala Vada in Tamil

  1. பருப்பை 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
  2. பச்சை மிளகாய், இஞ்சி, பெருஞ்சீரகம், பூண்டு ஆகியவற்றை ஒரு மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.
  3. தண்ணீரை வடிக்கட்டி பருப்பை அரைத்துக்கொள்ளவும்.
  4. பருப்பு, வெங்காயம், புதினா, கொத்துமல்லி, உப்பு ஆகியவற்றைக் கலந்து வழிமுறை 2ல் கலவையை அரைத்துக்கொள்ளவும். உப்பு & பெருங்காயம் சேர்க்கவும்.
  5. அரிசி மாவு சேர்க்கவும் சற்றே அடர்த்தியான மாவைத் தயாரிக்க அளவை சரிசெய்யவும். சிலசமயம் மாவில் ஈரப்பதம் ’ இருக்கும், அதனால் தான் நான் இறுதியில் இதைச் சேர்த்தேன்.
  6. சமைக்கும் டிரேயை எடுத்து எண்ணெய் தடவிக்கொள்ளவும்.
  7. வடைக் காலவையை எடுத்து தட்டி டிரேயில் வைக்கவும்.
  8. வடைகளை எண்ணெயால் தடவி பிரிட்ஜில் 20 நிமிடங்கள் வைக்கவும்.
  9. ஓவனி 190 டிகிரிக்குச் சூடுபடுத்தி டிரேயை வைக்கவும்.
  10. 10ல் இருந்து 12 நிமிடங்களுக்கிடையில் சரிபார்க்கவும். அவை மேல் பக்கத்தில் பொன்னிறமானதும் திருப்பிப்போடவும். எனக்கு 18 நிமிடங்கள் ஆனது, முதன் பக்கத்திற்கு.
  11. அடுத்தப் பக்கத்தைத் திருப்பிப்போடவும், பொன்னிறமாக மாறிவிட்டதா என்று சரிபார்க்க. திருப்பியதும் எண்ணெய் தடவுவது அவசியம். சமைக்கு நேரத்தில் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா என்று பார்ப்பதற்கு ஒரு வரிசைக்கு நான் செய்தேன், ஆனால் எந்த வித்தியாசமும் இல்லை. ஒட்டுமொத்தமாக சமைப்பதற்கு எனக்கு 35 நிமிடங்கள் ஆனது.
  12. ஓவனை நிறுத்திவிட்டு, பரிமாறும்வரை உள்ளேயே சூடாக விட்டுவைக்கலாம்.
  13. பேக்கிங் செய்யப்பட்ட ஆரோக்கியமான மசாலா வடையை ஒரு கப் மசாலா டீயுடன் உண்டு மகிழவும்.

எனது டிப்:

உங்கள் சுவைக்கேற்றபடி மிளகாயைச் சரிசெய்துகொள்ள. • உணவு தண்ணீர் போல் ஆகாமல் பார்த்துக்கொள்ளவும் ’, இல்லையேல் அரிசியுடன் சேர்ப்பது கடினமாகிவிடும். • குறைந்தது 15-20 நிமிடங்கள் பிரிட்ஜில் வைக்கவேண்டும்.

Reviews for Baked Masala Vada in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.