வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் டிக்கா மசாலா

Photo of Chicken tikka masala by Sumaiya Arafath at BetterButter
748
1
0.0(0)
0

சிக்கன் டிக்கா மசாலா

Sep-18-2018
Sumaiya Arafath
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் டிக்கா மசாலா செய்முறை பற்றி

வாசனை நிறைந்த கறி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • இந்திய
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழி இறைச்சி 1/2 கிலோ
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 2
  4. பச்சை மிளகாய் 1
  5. இஞ்சி பூண்டு விழுது 1 தே.க
  6. மஞ்சள் தூள் 1 தே.க
  7. பிரியன் மிளகாய்த்தூள் 2 தே.க
  8. வெண்ணை + எண்ணை
  9. மல்லி தூள் 1/2 தே.க
  10. சீரகத்தூள் ஒரு தேக்கரண்டி
  11. கட்டி தயிர் -1 கப்
  12. கரம் மசாலா ஒரு தேக்கரண்டி
  13. உப்பு
  14. கோழி இறைச்சி மேரிநேட் செய்ய தேவையான பொருட்கள்;
  15. 1.இஞ்சி பூண்டு விழுது ஒரு மே.கரண்டி
  16. 2.பிரியன் மிளகாய் தூள்-1 தே.க
  17. 3.சீரகத்தூள் 1/2 தே.க
  18. 4.மஞ்சள்-1 தே.க
  19. 5.பெருஞ்சீரக பொடி 1/2 தே.க
  20. 6.கரம் மசாலா 1 தே.க
  21. 7.கெட்டித்தயிர் 1/2கப்
  22. 8.உப்பு
  23. ஒரு துண்டு நிலக்கரி(சார்க்கோள்)
  24. மல்லி இலை
  25. தக்காளி பேஸ்ட் 2 மே.க
  26. உப்பு

வழிமுறைகள்

  1. இறைச்சியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்
  2. இறைச்சியுடன்( 1-8)இஞ்சி பூண்டு விழுது ,மிளகாய் தூள் , கரம் மசாலா தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், பெருஞ்சீரகத்தூளு,தயிர்,உப்பு போட்டு நன்றாக 2 மணிநேரம் ஊற வைக்கவும்
  3. தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி கோழி இறைச்சியை சிறு தீயில் சுட்டெடுக்கவும்
  4. அல்லது ஓவனில் சுட்டெடுக்கலாம்
  5. வாணலியில் வெண்ணை மற்றும் எண்ணெய் ஊற்றி வெங்காயம் ,தக்காளி,ப.மிளகாய்,இஞ்சி பூண்டு, மசாலா பொடி சேர்த்துநன்றாக வதக்கி எடுக்கவும்.எண்ணை தெளியும் வரை
  6. பிறகு தக்காளி பேஸ்ட் சேர்க்கவும்
  7. சிக்கன் துண்டுகளை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்
  8. கெட்டித் தயிரை ஊற்றவும்
  9. நிலக்கரி துண்டை அடுப்பில் காட்டி அதை பற்ற வைத்து சிறு பாத்திரத்தில் வைத்து அதை கறியினுள் வைத்து சிறிது எண்ணை ஊற்றி மூடி வைக்கவும்
  10. அதிலிருந்து வரும் புகை திக்கா மணத்தை கொடுக்கும்
  11. பத்து நிமிடம் கழித்து திறந்து அந்த கரியை வெளியே எடுக்கவும். பிறகு மல்லி இலையை போட்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்