Home / Recipes / Cauliflower Tikka Masala

Photo of Cauliflower Tikka Masala by IrsHanA M at BetterButter
289
6
0.0(0)
0

Cauliflower Tikka Masala

Feb-26-2018
IrsHanA M
20 minutes
Prep Time
35 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cauliflower Tikka Masala RECIPE

சப்பாதி,தோசைக்கு ஏற்ற சுவையான காலிபளவர் டிக்கா மசாலா

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • North Indian
  • Baking
  • Sauteeing
  • Side Dishes

Ingredients Serving: 3

  1. மேரினேட் செய்ய:
  2. காலி்பளவர்-400 கிராம்
  3. மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
  4. காஷ்மிரி மிளகாய் தூள்-2 டீஸ்பூன்
  5. மல்லி தூள்-1 டீஸ்பூன்
  6. கரம் மசாலா-1 டீஸ்பூன்
  7. தயிர்-1/4 கப்
  8. எலுமிச்சை சாறு-1/2 மூடி
  9. இஞ்சி பூண்டு விழுது-1 டீஸ்பூன்
  10. கடுகு எண்ணெய்-2 டீஸ்பூன்
  11. ஓமம்-1/4 டீஸ்பூன்
  12. கஸூரி மேத்தி-1/2 டீஸ்பூன்
  13. கடலை மாவு-2 டேபிள் ஸ்பூன்
  14. மசாலா கிரேவி செய்ய:
  15. வெங்காயம்-2(பொடியாக நறுக்கியது)
  16. தக்காளி-2 (விழுதாக அடித்து வைக்கவும்)
  17. இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன்
  18. சீரகம்-1/2 டீஸ்பூன்
  19. ப்ரெஷ் க்ரீம்-1/4 கப்
  20. முந்திரி விழுது-2 டீஸ்பூன்
  21. மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
  22. காஷ்மிரி மிளகாய் தூள்-2 டீஸ்பூன்
  23. மல்லி தூள்-1 1/2 டீஸ்பூன்
  24. கரம் மசாலா-1/2 டீஸ்பூன்+1/4டீஸ்பூன்
  25. கஸூரி மேத்தி-1/2 டீஸ்பூன்
  26. எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
  27. உப்பு-தேவைக்கு
  28. மல்லி இலை-சிறிதளவு
  29. வெங்காயம்-1
  30. குடைமிளகாய்-1
  31. தக்காளி-1/2

Instructions

  1. ஒரு பேனில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஓமம்,கடலை மாவு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து தனியாக மாற்றி அதனுடன் மேரினேட் செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் நன்றாக சுத்தம் செய்த காலிபிளவர் சேர்த்து கலந்து 10-15 நிமிடம் வைக்கவும்.
  2. அதனை ப்ரீஹீட் செய்த அவனில் 180/200°c-ல் 10 நிமிடம் பேக்(Bake) செய்து எடுக்கவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  4. இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை வாசனை போனதும் அடித்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து 5நிமிடம் கிளறவும்.
  5. இதனுடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள்,கரம் மசாலா,உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி முந்திரி விழுது சேர்த்து மேலும் நன்றாக கிளற வேண்டும்.
  6. மற்றொரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கியூப்பாக வெட்டிய வெங்காயம்,குடைமிளகாய்,தக்காளி சேர்த்து சிறிதாக வதக்கி கிரேவியில் சேர்க்கவும்.(அல்லது காலிபளவருடன் மேரினேட் செய்து பேக்(Bake) செய்தும் எடுக்கலாம்)
  7. இதனுடன் ப்ரெஷ் க்ரீம்,கஸுரி மேத்தி,மல்லி இலை,கரம் மசாலா சேர்த்து ஏற்கனவே பேக்(Bake) செய்து வைத்துள்ள காலிபளவர் டிக்காவை மசாலாவுடன் சேர்த்து கலந்து விடவும்.
  8. சுவையான காலிபளவர் டிக்கா மசாலா தயார்..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE