வீடு / சமையல் குறிப்பு / வெஜ் அத்தோ பர்மா உணவு

Photo of Veggie Attho Burma Food by pavumidha arif at BetterButter
2120
2
0.0(0)
0

வெஜ் அத்தோ பர்மா உணவு

Sep-18-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜ் அத்தோ பர்மா உணவு செய்முறை பற்றி

இரவு நேரத்தில் சுவையான மற்றும் மிதமான உணவு வகை.காய்கறிகள் சேர்ப்பதால் சத்துக்கள் அதிகம் நிறைந்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • ஃபிரெஞ்ச்
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நூடுல்ஸ் 2 கப்
  2. எண்ணெய் தேவையான அளவு
  3. உப்பு தேவையான அளவு
  4. கேரட் 3
  5. முட்டைகோஸ் 1/2
  6. பொட்டு கடலை 3 டீஸ்பூன்
  7. காய்ந்த மிளகாய் 3 டீஸ்பூன்
  8. வெங்காயம் 1 மற்றும் 1/2
  9. பூண்டு 7

வழிமுறைகள்

  1. கடாயில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதித்து விடவும்.பின்னர் உப்பு மற்றும் உணவு கலர் தூள் சேர்த்து கிளறவும்
  2. இப்போது பெரிய நூடுல்ஸை சேர்த்து நன்கு வேக விடவும்.
  3. நூடுல்ஸ் வெந்ததும் தண்ணீரை வடித்து சிறிது எண்ணெய் சேர்த்து கிளறி தனியாக வைக்கவும்
  4. பின்னர் மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்
  5. மிக்ஸியில் காய்ந்த மிளகாய்,பொட்டு கடலை சேர்த்து அரைத்து கொள்ளவும்
  6. ஒரு பாத்திரத்தில் நூடுல்ஸ் ,அரைத்த பொடி, வெங்காயம், பூண்டு, கேரட் மற்றும் முட்டை கோஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.
  7. சுவையான காரமான வெஜ் அத்தோ பர்மா உணவு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்