வீடு / சமையல் குறிப்பு / கறுப்பு உளுந்து சாதம்

Photo of Black urad dal rice by Fathima Beevi at BetterButter
627
2
0.0(0)
0

கறுப்பு உளுந்து சாதம்

Sep-24-2018
Fathima Beevi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கறுப்பு உளுந்து சாதம் செய்முறை பற்றி

கறுப்பு உளுந்து சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி - 1  1/4 படி (கால் படி உலக்கில் 1 1/4 உலக்கு)
  2. கறுப்பு உளுந்து- 1/2 படி (கால் படி உலக்கில் 1/2 உலக்கு)
  3. பட்டை - 1 இன்ச்
  4. கிராம்பு- 3
  5. ஏலக்காய்- 4
  6. பூண்டு பற்கள்- 10
  7. இஞ்சி- 2 இன்ச்
  8. தக்காளி- 2- பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  9. பெரிய வெங்காயம் - 1 - நன்றாக நறுக்கி கொள்ளவும்
  10. கொத்தமல்லி இலை- 2 டேபிள் ஸ்பூன்
  11. புதினா- 1 டேபிள் ஸ்பூன்
  12. கருலேப்பில்லை- 1 டேபிள் ஸ்பூன்
  13. பச்சை மிளகாய்-2 - நெடுப்பமாக நறுக்கிக் கொள்ளவும்
  14. தண்ணீர்- 3 1/2 கப்
  15. தேங்காய் எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
  16. நெய்- 1 1/2 டேபிள் ஸ்பூன்
  17. வெந்தயம்- 1/4 டீ ஸ்பூன்
  18. பெருங்சீரகம்- 1/4 டீ ஸ்பூன்
  19. சீரகம்- 1/4 டீ ஸ்பூன்
  20. மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன்
  21. பெருங் காயத்தூள்- 1 சிட்டிகை
  22. கரம் மசாலா தூள்- 1/4 டீ ஸ்பூன்
  23. மிளகாய் தூள்-1/4 டீ ஸ்பூன்
  24. உப்பு- தேவையான அளவு- 1 1/4 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயை சூடாக்கி கறுப்பு உளுந்து சேர்த்து நன்கு வாசனை வரும் வரை  வறுக்கவும்
  2. வறுத்த கறுப்பு உளுந்து குளிர்ந்த பின் கறுப்பு உளுந்து மற்றும் அரிசியை தண்ணீரில் கழுவி வைக்கவும்.
  3. மிக்ஸி ஜாரில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பூண்டு பற்கள், இஞ்சி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மைய அனரத்து எடுக்கவும்.
  4. குக்கரில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்கவும்
  5. சூடான பின்  பெருஞ்சீரகம், சீரகம், வெந்தயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொடித்து கொள்ளவும்.
  6. பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து  பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
  7. வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்கவும்.
  8. பின்னர் நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி, கருலேப்பில்லை மற்றும் புதினா சேர்த்து வதக்கவும்.
  9. இதனுடன் மஞ்சள் தூள், பெருங் காயத்தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  10. நன்கு வதக்கிய பின் உப்பு மற்றும் அளந்து வைத்துள்ள தண்ணீர் சேர்க்கவும்.
  11. கழுவி வைத்துள்ள கறுப்பு உளுந்து மற்றும் அரிசி சேர்த்து நன்கு கிளறவும்.
  12. பின்னர் குக்கரை மூடி வைத்து 3-4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  13. விசில் அடங்கியதும் சூடான கறுப்பு உளுந்து சாதத்தை எள்ளு சட்னி யுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்