வீடு / சமையல் குறிப்பு / ஆப்பம், மாசி ஆணம்(குழம்பு)

Photo of Aapam, dry fish (maasi) curry by Rabia Hamnah at BetterButter
977
0
0.0(0)
0

ஆப்பம், மாசி ஆணம்(குழம்பு)

Sep-24-2018
Rabia Hamnah
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆப்பம், மாசி ஆணம்(குழம்பு) செய்முறை பற்றி

சுவையான உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஸ்ரீலங்கன்
  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆப்பம்:பச்சரிசி -2 கப் (Approximately 2 big tumblers)
  2. துருவிய தேங்காய் -1
  3. சோறு-1/2 கப்
  4. சீனி- 1 டேபிள் ஸ்பூன்
  5. உப்பு-தேவைக்கு
  6. மாசி ஆணம் (குழம்பு)
  7. பல்லாரி-2
  8. தக்காளி-2
  9. இஞ்சி பூண்டு விழுது-1 ஸ்பூன்
  10. வத்தல் தூள்- 11/2 ஸ்பூன்
  11. ப.மிளகாய்-2
  12. கறிவேப்பிலை , கடுகு,எண்ணெய்-தாளிக்க
  13. மாசி தூள்-4-5 ஸ்பூன்
  14. உப்பு- தேவைக்கு
  15. தேங்காய் பால் (கெட்டியானது)- 3 டேபிள்  ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஆப்பம் செய்முறை:
  2. மேலே கூறியவற்றை மிக்ஸியில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
  3. அரைத்த மாவை 8-12 மணி நேரம் வைத்து விடவும்.  மாவு கொஞ்சம் பொங்கி இருக்கும்.  அப்பொழுது 1/4 ஸ்பூன் சோடா உப்பு சேர்த்து கலக்கி ஆப்பச் சட்டியில் சுட்டெக்கவும்.
  4. மாசி ஆணம் செய்முறை:-
  5. முதலில் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  6. பின் நறுக்கிய பல்லாரி, இஞ்சி, பூண்டு விழுது, ப.மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.உப்பு, வத்தல் தூள் சேர்க்கவும்.
  7. தக்காளி  சேர்த்து வதக்கவும். மசிய வேக விடவும். மாசி தூள் சேர்க்கவும். 10 நிமிடம்  சிம்மால் வைத்து வேக விடவும்.
  8. பின் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதியில் இறக்கவும். உப்பு தேவைபட்டால் சேர்க்கவும். சுவையான மாசி ஆணம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்