வீடு / சமையல் குறிப்பு / நத்தம் முட்டை கறி குழம்பு

Photo of Natham egg curry by Juvaireya R at BetterButter
492
1
5.0(0)
0

நத்தம் முட்டை கறி குழம்பு

Sep-29-2018
Juvaireya R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நத்தம் முட்டை கறி குழம்பு செய்முறை பற்றி

நத்தம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது .அங்கு இஸ்லாமிய சமூகத்தினரின் மிகவும் பிரபலமான ஆவியில் வேகவைத்த முட்டை +குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 3 முட்டை
  2. 1தேக்கரண்டி இஞ்சி பூண்டுவிழுது
  3. நறுக்கிய வெங்காயம் - 2 தேக்கரண்டி
  4. சோம்புத்தூள் 1/2 தேக்கரண்டி
  5. கரம்மசலா தூள் 1/4 தேக்கரண்டி
  6. உப்பு தேவையான அளவு
  7. கொத்துமல்லி இலை சிறிதளவு
  8. சின்னவெங்காயம் -1/4 கப்
  9. தக்காளி -2
  10. வெள்ளபூண்டு - 4 பல்
  11. புளி எலுமிச்சை அளவு
  12. 3தேக்கரண்டி நல்லெண்ணெய்
  13. 1/4 தேக்கரண்டி சீரகம்
  14. 4-5வெந்தயம்
  15. கறிவெப்பிள்ளை சிறிதளவு
  16. தேங்காய் 1/4 கப்
  17. 1தேக்கரண்டி மிளகாய்தூள்
  18. 2 தேக்கரண்டி மல்லித்தூள்
  19. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்

வழிமுறைகள்

  1. 3 முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.
  2. அதில் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம்,சீரகம் ,சோம்பு தூள் மற்றும் உப்பு, மிளகு தூள்,நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கவும்.
  3. ஒரு தட்டில் எண்ணெய் தடவி கலந்த கலவையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
  4. பத்து நிமிடம் கழித்து ஒரு கத்தியால் வெந்துள்ளதா என பார்க்கவும்.
  5. அதனை நன்கு ஆறவிடவும்.
  6. குழம்பிற்க்கு தேங்காய்,சின்னவெங்காயம்,சீரகம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  7. ஒரு பாத்திரத்தை சூடேற்றி அதில் நல்லெண்ணெய் ஊற்றவும்
  8. எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் சீரகம்,வெந்தயம் சேர்க்கவும்.
  9. பின் அதில் நறுக்கிய வெங்காயம் வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கவும்.
  10. வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  11. தக்காளி நன்கு வதங்கியதும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  12. பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் ,மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
  13. பின் கரைத்த புளி கரைசலை சேர்க்கவும்.
  14. தேவையான அளவு உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.
  15. நன்கு கொதித்ததும் அதில் அரைத்த வெங்காயம், தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
  16. பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்
  17. நன்கு கொதித்து குழம்பு பதத்திற்கு வரவேண்டும்.
  18. வேக வைத்த முட்டையை துண்டுகளாக நறுக்கி எடுக்கவும்
  19. கொதிக்கும் குழம்பில் ஒன்றன் பின் ஒன்றாக முட்டைகளை போடவும்.
  20. 2 நிமிடம் நன்கு கொதித்ததும் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
  21. சூடான ,சுவையான, சத்தான நத்தம் முட்டை கறி குழம்பு தயார்.
  22. இக் குழம்பு வெள்ளை சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்