வீடு / சமையல் குறிப்பு / கல்யாண சாப்பாடு

Photo of Kalyana sapadu by Nazeema Banu at BetterButter
1077
2
5.0(0)
0

கல்யாண சாப்பாடு

Sep-30-2018
Nazeema Banu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கல்யாண சாப்பாடு செய்முறை பற்றி

முகவை மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் இந்ந கல்யாண சாப்பாடு வீடு வீடாக வினியோகம் செய்யப்படுவது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நெய் சோறு
  2. தேவையானவை
  3. சாப்பாட்டு அரிசி 3கப்
  4. பெரிய தேங்காய் 1
  5. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  6. வெங்காயம்1
  7. பட்டை ஏலம் கிராம்பு தலா இரண்டு
  8. நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
  9. ஆயில் தேவையான அளவு
  10. கறிவேப்பிலை சிறிது
  11. ரம்ப இலை சிறிது
  12. களறி கறி
  13. தேவையானவை
  14. மட்டன் அரை கிலோ
  15. பெ.வெங்காயம் 2
  16. தக்காளி 2
  17. மி.தூள் 1ஸ்பூன்
  18. உப்பு தே.அளவு
  19. கீழை மட்டன் மசாலா இரண்டு டே.ஸ்பூன்
  20. இஞ்சி பூண்டு விழுது 2டேபிள் ஸ்பூன்
  21. எண்ணெய் தே.அளவு
  22. கறிவேப்பிலை
  23. மல்லி இலை
  24. தாள்ச்சா
  25. தேவையானவை
  26. க.பருப்பு அரை கப்
  27. து.பருப்பு ஒரு கப்
  28. வாழைக்காய் 1
  29. உ.கிழங்கு 1
  30. கத்தரிக்காய் 2
  31. தக்காளி 2
  32. பெ.வெங்காயம் 1
  33. ப மிளகாய் 2
  34. மி.தூள் அரை ஸ்பூன்
  35. ம.தூள் அரை ஸ்பூன்
  36. உப்பு
  37. கறிவேப்பிலை மல்லி
  38. மல்லி தூள் இரண்டு ஸ்பூன்
  39. மட்டன் எலும்பு அரை கிலோ
  40. தக்காளி ஜாம்
  41. தேவையானவை
  42. தக்காளி அரை கிலோ
  43. சர்க்கரை ஒன்றரை கப்
  44. நெய் இரண்டு டே.ஸ்பூன்

வழிமுறைகள்

  1. நெய் சோறு செய்முறை
  2. தேங்காயை அரைத்து முதல் பால் ஒரு கப் எடுக்கவும்
  3. மேலும் தண்ணீர் ஊற்றி இரண்டாம் பால் ஐந்து கப் எடுக்கவும்.
  4. குக்கரில் எண்ணெய் நெய் கலந்து ஊற்றி பட்டை.கிராம்பு.ஏலம் தாளிக்கவும்.
  5. அதிலேயே பெ.வெங்காயம்.ரம்பை இலை கறிவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  6. மூன்று கப் அரிசிக்கு ஆறு கப் வீதம் முதல் மற்றும் இரண்டாம் தே.பாலை ஊற்றவும்.
  7. சிறு கொதி வரும் போது அரிசியைக் களைந்து போட்டு உப்பு சேர்த்து குக்கரை மூடவும்.
  8. நான்கு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் கழித்து கிளறி பரிமாறவும்.
  9. களறி கறி செய்முறை
  10. குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை ஏலம் அரைத்த வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு கலவை சேர்த்து வதக்கவும்.
  11. அதில் உப்பு.மிதூள்.ம.தூள் தக்காளி சேர்த்து கிளறவும்.
  12. இலேசாக வதங்கியதும் உப்பு சேர்த்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வைத்து வேக விடவும்.
  13. பின் குக்கரை திறந்து வெட்டிய உ.கிழங்கு மற்றும் கீழை மட்டன் மசாலா சேர்த்து வேக விடவும்.
  14. கிழங்கு வெந்து பச்சை வாசனை போனதும் அரை கப் திக்கான தே.பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  15. எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் இறக்கவும்.
  16. தாள்ச்சா செய்முறை
  17. குக்கரில் து.பருப்பு.க.பருப்பு மூன்று கப் தண்ணீர் ம.தூள் சேர்க்கவும்.
  18. அதில் மட்டன் எலும்பு சேர்க்கவும்.
  19. அதிலேயே வெங்காயம்.ப.மிளகாய்.தக்காளி இஞ்சி பூண்டு விழுது.கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
  20. குக்கரை திறந்து உ.கிழங்கு.கத்தரிக்காய் வாழைக்காய் சேர்க்கவும்.
  21. அதில் மல்லி தூள் சிறிது உப்பு சேர்த்து வேக விடவும்.
  22. தக்காளி ஜாம்‌செய்முறை
  23. கனமான கடாயை அடுப்பில் வைத்து தக்காளி துண்டுகள் சர்க்கரையை சேர்க்கவும்.
  24. தண்ணீர் சேர்க்காமல் மிதமான தீயில் கிளறவும்.
  25. சுருண்டு வரும் போது அரை கப் திக்கான தே.பால் விடவும்.
  26. இறக்குவதற்கு முன் இரண்டு ஸ்பூன் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்