வீடு / சமையல் குறிப்பு / ஆற்காடு மக்கன் பேடா

Photo of Arcot Makkan Peda by Jayasakthi Ekambaram at BetterButter
923
3
0.0(0)
0

ஆற்காடு மக்கன் பேடா

Oct-02-2018
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆற்காடு மக்கன் பேடா செய்முறை பற்றி

முந்திரி பாதாம் பருப்பு ஸ்டப் செய்து செய்யும் பேடா

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சர்க்கரை இல்லாத கோவா அரை கப்
  2. மைதா ஒரு கப்
  3. முந்திரி 4
  4. பாதாம்பருப்பு 4
  5. சர்க்கரை 2 கப்
  6. தண்ணீர் 2 கப்
  7. பேக்கிங் பவுடர் கால் ஸ்பூன்
  8. நெய் 2 ஸ்பூன்
  9. வனஸ்பதி 2ஸ்பூன்
  10. எண்ணெய் பொரிப்பதற்கு
  11. கெட்டித் தயிர் கால் கப்
  12. ஏலக்காய் 4

வழிமுறைகள்

  1. 2 கப் சர்க்கரையில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து கெட்டியாக சர்க்கரைப்பாகு செய்து கொள்ளவும்
  2. சர்க்கரை பாகில் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
  3. முந்திரி பாதாம் பருப்புகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  4. மைதா மாவுடன் கோவா பேக்கிங் பவுடர் நெய் வனஸ்பதி தயிர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  5. சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து மேலே நெய் தடவி மூடி வைத்து கால் மணி நேரம் ஊறவைக்கவும்
  6. கால்மணி நேரத்திற்கு பிறகு பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து தட்டையாக தட்டி அதன் நடுவே பாதாம் முந்திரி வைத்து மூடி திரும்பவும் அதை தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்
  7. இவற்றை மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  8. பொரித்தெடுத்த பேடாக்களை சர்க்கரை பாகில் ஊற வைக்கவும்
  9. இரண்டு மணி நேரம் ஊற வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்