வீடு / சமையல் குறிப்பு / மதுரை சிறப்பு உருளைக்கிழங்கு மசால் பொட்டலம்.

Photo of Madhuri spl potato masail packet by Karuna Pooja at BetterButter
749
4
0.0(0)
0

மதுரை சிறப்பு உருளைக்கிழங்கு மசால் பொட்டலம்.

Oct-06-2018
Karuna Pooja
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மதுரை சிறப்பு உருளைக்கிழங்கு மசால் பொட்டலம். செய்முறை பற்றி

மதுரை மாவட்டம் ஆதி மூல வீதியில் சிறப்பு பெற்ற உருளைக்கிழங்கு மசால் பொட்டலம் தயாரிப்பு முறையை இங்கு காண்போம்.இது 4 தலை முறைகளாக தயார் செய்து வருகிறார்கள்.16 வகை பொருட்கள் கொண்டு அஞ்சறை பெட்டி மருத்துவத்தையும் இதில் சேர்த்து தயாரிக்கின்றனர்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக் கிழங்கு 100 கிராம்
  2. பெரிய வெங்காயம் 50 கிராம்
  3. கடலை மாவு 3 டீஸ்பூன்
  4. இஞ்சி 1 இன்ச் துண்டு
  5. பூண்டு 6 பல்
  6. பச்சை மிளகாய் 3
  7. கருவேப்பிலை ஒரு சிறிய கொத்து
  8. தேங்காய் எண்ணெய் 3 டீஸ்பூன்
  9. கடுகு 1/4 டீஸ்பூன்
  10. சோம்பு 1/4 டீஸ்பூன்
  11. கசகசா 1/4 டீஸ்பூன்
  12. சீரகம் 1/4 டீஸ்பூன்
  13. மிளகு 1/4 டீஸ்பூன்
  14. மிளகாய்ப் பொடி 1/2 டீஸ்பூன்
  15. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  16. உப்பு தேவையான அளவு
  17. பெருங்காயம் 1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து தோல் நீக்கி மசித்து வைக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு / சோம்பு பொரிய விடவும்.
  3. கருவேப்பிலை பச்சை மிளகாய் பூண்டு இஞ்சி நறுக்கியது சேர்க்கவும்.
  4. கருவேப்பிலை வதங்கியதும் வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கவும்.
  5. மிளகு /சீரகம் /கசகசா இவற்றை பொடித்து சேர்த்து வதக்கவும்
  6. மஞ்சள் தூள் /மிளகாய் தூள்/ பெருங்காயம் சேர்த்து வதக்கவும்
  7. சிறிய தீயில் கடலை மாவை சேர்க்கவும்
  8. கடலை மாவு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  9. தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
  10. மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கலந்து விடவும்
  11. இதனை பொட்டலமாக தயாரிக்க வாழை இலையை இளம் சூட்டில் வாட்டவும்
  12. சூடான உருளைக்கிழங்கு மசாலை இலையில் வைத்து மடித்துக்கட்டவும்.
  13. பத்து நிமிடத்திற்கு பிறகு சுவைத்தால் சுவை கூடும்.
  14. இது மதுரை வீதியின் மதிய உணவுக்கு துணை உணவாக உண்ணுகிறார்கள் ...
  15. மேலும் இது 120 ஆண்டுகள் நான்கு தலைமுறையாக விற்று வருகின்றனர்.....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்