கீரை பிரெட் உப்மா | Green bread Upma in Tamil

எழுதியவர் Divya   |  5th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Green bread Upma by Divya  at BetterButter
கீரை பிரெட் உப்மாDivya
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

68

0

கீரை பிரெட் உப்மா recipe

கீரை பிரெட் உப்மா தேவையான பொருட்கள் ( Ingredients to make Green bread Upma in Tamil )

  • சாண்ட்விச் பிரெட் - 1 சிறிய பேக்
  • வெங்காயம் - 2 நறுக்கப்பட்டது
  • சுவைக்கு உப்பு
  • எண்ணெய் 1 தேக்கரண்டி
  • ஒன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  • கொத்துமல்லி - 1 சிறிய கொத்து
  • தேங்காய் துருவல் - 1/2 கப்
  • வெங்காயம் - 1 நறுக்கப்பட்டது
  • இஞ்சி - 1 இன்ச் துண்டு
  • பச்சை மிளகாய் - 4 எண்ணிக்கை
  • இலவங்கப்பட்டை - 1 துண்டு
  • கிராம்பு - 2 துண்டுகள்
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கீரை பிரெட் உப்மா செய்வது எப்படி | How to make Green bread Upma in Tamil

  1. முதலில் பிரெட்டை சிறுசிறு துண்டுகளாக விளிம்புகளைச் சுற்றி வெட்டிக்கொள்ளவும்.
  2. எதுவும் சேர்க்காமல் பிரெட் துண்டுகளை 2 நிமிடங்கள் ஒரு கடாயில் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அரைப்பதற்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களையும் சாந்தாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி வெங்காயம் சேர்த்து சில நிமிடங்கள் அது வேகும்வரை வதக்கவும்.
  5. அரைத்த மசாலா சாந்தைச் சேர்த்து சில நிமிடங்கள் பச்சை வாடை போகும்வரை சமைக்கவும்.
  6. தேவையான அளவு உப்பை, கலவையில் சேர்த்துக்கொள்ளவும். (பிரெட்டிலும் உப்பு இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்)
  7. இறுதியாக பிரெட் துண்டுகளைச் சேர்த்து எல்லாவற்றையும் 2 நிமிடங்களுக்கு ஒன்றாகக் கலந்துகொள்ளவும், அப்போதுதான் மசாலா அனைத்து பிரெட் துண்டுகளிலும் முறையாகப் பூசிக்கொள்ளும்.
  8. உப்பு சரிபார்க்கவும்.
  9. சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

உங்களுக்குப் பிடித்த எந்த பிரெட்டையும் தேர்ந்தெடுக்கொள்ளலாம், ஆனால் பால் பயன்படுத்தினால் அது சொதசொதப்பாக மாறவேண்டும். உப்பு சேர்க்கும் போது கவனம் தேவை, ஏனெனில் ஏற்கனவே பிரெட்டில் உப்பு இருக்கும். பச்சை வாடை போகும்வரை மசாலாவை சமைத்துக்கொண்டதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.

Reviews for Green bread Upma in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.