வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் தீயல்

Photo of Bitter-gourd theeyal by Krishnasamy Vidya Valli at BetterButter
576
0
5.0(0)
0

பாகற்காய் தீயல்

Oct-20-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் தீயல் செய்முறை பற்றி

இது நோ ஆனியன் நோ கார்லிக் வகையை சேர்ந்த குழம்பு வெரைட்டி. செய்வது மிகவும் சுலபம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பாகற்காய் நறுக்கியது அரை கப்
  2. கெட்டியான புளிக்கரைசல் 2 தேக்கரண்டி
  3. வெல்லம் ஒரு சிறிய துண்டு
  4. உப்பு அரை தேக்கரண்டி +2 சிட்டிகை
  5. மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  6. வறுத்து பொடி செய்ய தேவையானவை
  7. தேங்காய் எண்ணெய் கால் தேக்கரண்டி
  8. மிளகாய் வத்தல் 2 அல்லது 3
  9. கொத்தமல்லி விதை 2 தேக்கரண்டி
  10. தேங்காய் துருவல் ஒரு மேஜைக்கரண்டி
  11. தாளிக்க தேவையானவை
  12. தேங்காய் எண்ணெய் அரை தேக்கரண்டி
  13. கடுகு கால் தேக்கரண்டி
  14. மிளகாய்வற்றல் 1
  15. பெருங்காயம் 2 சிட்டிகை
  16. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  17. பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகள் ஒரு மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. வறுத்து பொடி செய்ய கொடுத்தவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  2. பாகற்காயில் 2 சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்கும் நீரில் 5 முதல் 10 நிமிடங்கள் வைத்திருந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
  3. அதோடு உப்பு மஞ்சள் பொடி புளிக்கரைசல் வெல்லம் சேர்த்து வேக விடவும். விருப்பப்பட்டால் குக்கரில் ஒரு விசில் வைக்கலாம்
  4. நன்றாக வெந்ததும் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
  5. குழம்பு நன்றாக கெட்டியானதும் கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்