வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் அல்வா

Photo of Bottle guard halwa by Abinaya bala at BetterButter
443
0
0.0(0)
0

சுரைக்காய் அல்வா

Oct-22-2018
Abinaya bala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் அல்வா செய்முறை பற்றி

சுரைக்காய் வைத்து செய்யப்படும் ஒரு இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சுரைக்காய் ஒரு கப்
  2. சர்க்கரை 3 கப்
  3. கிரீன் ஃபுட் கலர் சிறிதளவு
  4. டூட்டி ஃப்ரூட்டி சிறிதளவு
  5. முந்திரிபருப்பு 10
  6. நெய்
  7. மைதா மாவு கால் கப்
  8. corn flour கால் கப்

வழிமுறைகள்

  1. சுரைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு அரைத்து நன்கு மையாக எடுத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் நீர் ஊற்றி 3 கப் சர்க்கரை சேர்த்து சர்க்கரை பாகு தயாரித்துக் கொள்ளவும்
  3. மற்றொரு பாத்திரத்தில் கால் கப் மைதா மாவு மற்றும் கார்ன்ஃப்ளாரை நீர் சேர்த்து அடிபிடிக்காமல் நன்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும்
  4. அந்தக் கலவையில் மையாக அரைத்து வைத்த சுரைக்காயை சேர்த்து நன்கு கிளறவும்
  5. இந்தக் கலவையை சர்க்கரை பாகில் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்
  6. கிரீன் ஃபுட் கலர் சிறிதளவு நீரில் கரைத்து அதனுடன் சேர்க்கவும்
  7. கிளறும்போது நெய் முந்திரி பருப்பு டூட்டி ஃப்ரூட்டி சேர்க்கவும்
  8. நெய் வெளிப்பட்டு பாத்திரத்தில் அடிப்பிடிக்காமல் சுருண்டு வரும் வரை நன்கு கிளறி கொண்டே இருக்கவும்
  9. அந்தவேளையில் நெய் தடவிய தட்டில் இதனை ஊற்றி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுக்கவும்
  10. சுவையான இனிப்பான சுரைக்காய் அல்வா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்