பூரணம் வைக்கப்பட்ட முழு தேங்காய் உணவுக் குறிப்பு | தேங்காய் சுடும் பண்டிகை | தேங்காய் ஆடி திருவிழா | Stuffed Whole Coconut Recipe | Thengai Sudum Pandigai | Coconut Aadi Festival in Tamil

எழுதியவர் Sangeetha Priya R  |  8th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Stuffed Whole Coconut Recipe | Thengai Sudum Pandigai | Coconut Aadi Festival by Sangeetha Priya R at BetterButter
பூரணம் வைக்கப்பட்ட முழு தேங்காய் உணவுக் குறிப்பு | தேங்காய் சுடும் பண்டிகை | தேங்காய் ஆடி திருவிழாSangeetha Priya R
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

9

0

பூரணம் வைக்கப்பட்ட முழு தேங்காய் உணவுக் குறிப்பு | தேங்காய் சுடும் பண்டிகை | தேங்காய் ஆடி திருவிழா recipe

பூரணம் வைக்கப்பட்ட முழு தேங்காய் உணவுக் குறிப்பு | தேங்காய் சுடும் பண்டிகை | தேங்காய் ஆடி திருவிழா தேவையான பொருட்கள் ( Ingredients to make Stuffed Whole Coconut Recipe | Thengai Sudum Pandigai | Coconut Aadi Festival in Tamil )

 • தேங்காய் - 2 எண்ணிக்கை
 • பச்சரிசி - 1/2 கப்
 • வெல்லம் - 1/2 கப்பும் அதற்கும் மேலும்
 • பொட்டுக்கடலை - 1/4 கப்
 • எள் - 2 தேக்கரண்டி
 • ஏலக்காய் கலந்த சர்க்கரை - 2 தேக்கரண்டி

பூரணம் வைக்கப்பட்ட முழு தேங்காய் உணவுக் குறிப்பு | தேங்காய் சுடும் பண்டிகை | தேங்காய் ஆடி திருவிழா செய்வது எப்படி | How to make Stuffed Whole Coconut Recipe | Thengai Sudum Pandigai | Coconut Aadi Festival in Tamil

 1. தேங்காயிலிருந்து ஓட்டை எடுத்து கழுவிவிட்டு தயாராக வைக்கவும். அரிசியை குறைந்தது 1 மணி நேரம் ஊறவைக்கவும். தேங்காயின் மூன்று கண்களில் ஒன்றில் ஓட்டை போட்டு பின்னர் பயன்படுத்துவதற்காக எடுத்து வைக்கவும்.
 2. வெல்லம், அரிசி, பொட்டுக்கடலை, எள்ளு, ஏலக்காய்த் தூள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து ஒரு தேக்கரண்டி தேங்காய் தண்ணீரை ஒரே நேரத்தில் சேர்க்கவும்
 3. அதற்குப் பதிலாக அனைத்துப் பொருள்களையும் அதிகமாக வெல்லத்தோடு சேர்த்து பாதி தேங்காய்த் தண்ணீரை மட்டும் பயன்படுத்துவதை உறுதி செய்துகொள்ளவும். தேங்காயில் முழுமையாக நிரப்பி உங்கள் கட்டைவிரலால் ஓட்டை மூடி கழுவிக்கொள்ளவும்.
 4. அறையின் வெப்பத்தில் 2 மணி நேரத்தில் விட்டுவைக்கவும். ஒரு பச்சை மரக் குச்சையை கூர்மையான முனைகள் தேங்காயில் பொருந்துமாறு நுழைக்கவும்.
 5. இப்போது அடுப்பிற்குக் கொண்டுவந்து முழு தேங்காயும் கருப்பாகும் வரை வேகவைக்கவும் இல்லையேல் பூரணம் முழுமையாக வேகாது. சமமாக வேகுவதற்கு திருப்பவும். மேல் ஓடு எரிந்து அருமையான வாசனை வரவேண்டும். கருகிடக்கூடாது.
 6. மேலும் 1 மணி நேரத்திற்கு ஆறவிடவும், பூரணம் இருக்கும் வெப்பத்தில் தொடர்ந்து வேகட்டும். வெ ளிப்புற கருப்புப் பகுதிகளை ஓடும் நீரில் தேங்காயின் கண்ணை மூடி கழுவவும்.

எனது டிப்:

தேங்காய் சரியான நிலையில் இருக்கிறதா என பூரணத்தை நிரப்புவதற்கு முன் தண்ணீரை நுகர்ந்துபார்த்து சோதிக்கவும். சிலர் பாசிப் பருப்பைச் சேர்வைப்பொருள்களில் ஒன்றாக சேர்த்துக்கொள்வர், உங்களுக்கு அந்தச் சுவை பிடித்திருந்தால் சேர்த்துக்கொள்ளலாம்.

Reviews for Stuffed Whole Coconut Recipe | Thengai Sudum Pandigai | Coconut Aadi Festival in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.