வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் உசிலி

Photo of Snake guard usili by Krishnasamy Vidya Valli at BetterButter
364
0
0.0(0)
0

புடலங்காய் உசிலி

Oct-23-2018
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் உசிலி செய்முறை பற்றி

எளிமையான சவுத் இந்தியன் சைட்டிஷ் இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. நறுக்கிய புடலங்காய் துண்டுகள் கால் கப்
  2. உப்பு நான்கு சிட்டிகை
  3. தேங்காய் துருவல் ஒரு மேஜைக்கரண்டி
  4. ஊற வைத்து அரைக்க தேவையானவை
  5. துவரம்பருப்பு கடலைப்பருப்பு தலா ஒரு மேஜைக்கரண்டி
  6. மிளகாய்வற்றல் 1
  7. உப்பு மற்றும் பெருங்காயம் 4 சிட்டிகை
  8. தாளிக்க தேவையானவை
  9. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  10. கடுகு உளுத்தம்பருப்பு தலா கால் தேக்கரண்டி
  11. கருவேப்பிலை ஒரு ஆர்க்கு
  12. பருப்பு வதக்குவதற்கு 1 தேக்கரண்டி எண்ணெய்

வழிமுறைகள்

  1. பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து மிளகாய் வத்தல் உப்பு பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு அரைத்த விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும்
  3. நல்ல உதிர் உதிராக வந்தவுடன் தனியே எடுத்து விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்து புடலங்காய் உப்பு சேர்த்து வதக்கவும்
  4. நன்றாக வதங்கியதும் ஏற்கனவே செய்து வைத்த பருப்பு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்
  5. அப்படியே பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்