வீடு / சமையல் குறிப்பு / கிரீமான சோள முந்திரி குழம்பு

Photo of Creamy Corn Cashew Curry by Vibha Bhutada at BetterButter
4020
14
0.0(0)
0

கிரீமான சோள முந்திரி குழம்பு

Jul-11-2016
Vibha Bhutada
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ரஷியன்
  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இனிப்புச் சோள பருப்புகள் 1 கப்
  2. முந்திரி பருப்பு 1/2 கப்
  3. தக்காளி சாந்து 200 கிராம்
  4. இஞ்சி 1 மற்றும் 1/2 தேக்கரண்டி, துருவியது
  5. பச்சை மிளகாய் 2, நறுக்கியது
  6. எண்ணெய் 2 தேக்கரண்டி
  7. சீரகம் 1 தேக்கரண்டி
  8. கடுகு 1 தேக்கரண்டி
  9. பெருங்காயம் 1/8 தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  11. சிவப்பு மிளகாய்த் தூள் 1 தேக்கரண்டி
  12. மல்லித்தூள் 2 தேக்கரண்டி
  13. பால் 1 மற்றும் 1/2 கப்
  14. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. தக்காளி, முந்திரி பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பிளண்ட் செய்து கிரீம் போன்ற சாந்ததைத் தயாரித்து எடுத்து வைக்கவும்.
  2. ஒரு சாஸ் பாத்திரத்தில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்க.
  3. சூடானதும், சீரகம் சேர்த்து வெடிக்கவிடவும்.
  4. இப்போது சீரகம் வெடிக்கும்போது பெருங்காயத்தைச் சேர்க்கவும்.
  5. தக்காளி சாந்தைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  6. அடுத்து மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய்த் தூள், கொத்துமல்லித் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  7. மசாலாக் கலவையை கிட்டத்தட்ட 4-5 நிமிடங்கள் சமைக்கவும், வானலியில் எண்ணெய் பிரியும்வரை.
  8. சோளத்தைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  9. இப்போது பாலைச் சேர்த்து சிம்மில் மிதமானச் சூட்டில் வைக்கவும்.
  10. மூடிபோட்டி தீயைக் குறைத்து 12-15 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  11. அவ்வப்போது கலக்கவும். அப்போதுதான் குழம்பு அடர்த்தியாகி சோளம் மென்மையாகும்.
  12. வெந்ததும், அடுப்பை நிறுத்தவும்.
  13. பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி, பொடியாக நறுக்கிய முந்திரி பருப்பு அல்லது புதிய கொத்துமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
  14. ரொட்டி, நான், சாதாரண சாதம் அல்லது புலாவோடு சூடாகப் பரிமறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்