வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் பேடா தீபங்கள்

Photo of CHOCOLATE PEDA DIYAS by Kalai Rajesh at BetterButter
508
9
0.0(0)
0

சாக்லேட் பேடா தீபங்கள்

Oct-29-2018
Kalai Rajesh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் பேடா தீபங்கள் செய்முறை பற்றி

ஸ்வீட் கடைகளில் கிடைக்கும் பேடாக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சாக்லேட் பேடா நான் சாப்பிட்டது இல்லை, ஆனால் இணையதளத்தில் நிறையப் பார்த்திருக்கிறேன். கோயா உபயோகித்து நான் முயற்சித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. இந்தத் தீபாவளிக்கு, உங்கள் குழந்தைகளுக்கும் இதனைச் செய்து தரலாமே.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தீபாவளி
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கோயா - 200 கிராம்
  2. பால் - 1/4 கப் அ 4 மேசைக்கரண்டி
  3. சர்க்கரை - 1/4 கப்
  4. கோகோ பவுடர் - 2மேசைக்கரண்டி
  5. சாக்கலேட்டு சிரப் - சிறிதளவு
  6. பாதாம் மற்றும் பிஸ்தா -சிறிதளவு
  7. நெய் - 1 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை எடுத்து கொள்ள வேண்டும்
  2. நான் ஸ்டிக் பேனை சூடேற்றி அதில் நெய் ஊற்றவும்
  3. நெய் உருக்கியதும் அதில் பால் , கோயா, சர்க்கரை , கோகோ பவுடர் , சேர்த்து கிளறவும்
  4. படம்
  5. சாக்கலேட்டு சிரப்பை சேர்க்கவும் , சிரப் சேர்க்கவில்லை ஈன்றால் , சர்க்கரை அளவை அதிக படுத்தவும்
  6. தீயை குறைவாகவே வைக்கவும்
  7. கலவையை ஏதேனும் வடிவம் அமைக்க விரும்பினால் 1 மேசைக்கரண்டி பால் பௌடரை சேர்க்கலாம். (இது அவசியம் இல்லை)
  8. சிறிது நேரத்தில் கொதி பிடித்துவிடும் , விடாமல் கிளற வேண்டும்
  9. 10 அ 15 நிமிடத்தில் மாவு சுருண்டு வந்துவிடும்
  10. மாவை தட்டில் கொட்டவும்
  11. லேசாக பிசைந்து சம அளவான உருண்டைகளாக பிரிக்கவும்
  12. பிரித்து நைசாக உருட்டவும்
  13. உருட்டிய உருண்டையை நடுவே ஒரு குழி செய்யவும்.
  14. பின் அதனை தீபம் வடிவத்தில் மாற்றவும்.
  15. வடிவம் கொடுத்தபின் , சாதா கோயாவை வைத்து திரி செய்யவும், சீவிய பாதாமை வைத்து தீ செய்யவும். பிஸ்தாவை வைத்து அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்