வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பர்பி

Photo of Coconut Burfi by Juvaireya R at BetterButter
236
0
0.0(0)
0

தேங்காய் பர்பி

Oct-31-2018
Juvaireya R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பர்பி செய்முறை பற்றி

மிகவும் எளிய முறையில் சுவையான தேங்காய் பர்பி வீட்டிலேயே செய்யக்கூடிய ஒன்று மற்றும் பண்டிகை காலங்களில் எளிதாக செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. இரண்டு கப் தேங்காய் துருவல்
  2. 1.5 கப் சர்க்கரை
  3. ஏலக்காய்த்தூள் சிறிதளவு
  4. ஒரு தேக்கரண்டி பொடித்த முந்திரி
  5. நெய் சிறிதளவு
  6. தண்ணீர் அரை கப்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் தேங்காய் துருவலை நன்றாக இரண்டிலிருந்து மூன்று நிமிடம் வதக்கிக் கொள்ள வேண்டும்
  2. பின் தேங்காய் துருவலை நன்றாக ஆற வைக்க வேண்டும்
  3. ஒரு கடாயில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக சர்க்கரை கரையும் வரை கிளற வேண்டும்
  4. சர்க்கரை பாகு ஒரு கம்பிப் பதம் வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்
  5. சர்க்கரைப் பாகில் சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்
  6. சர்க்கரை பாகு கம்பிப்பதம் வந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்
  7. தேங்காய் கலவையை நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்
  8. அதே சமயத்தில் ஒரு பாத்திரத்தில் நன்றாக எண்ணெய் அல்லது நெய் தடவி வைத்துக் கொள்ள வேண்டும்
  9. தேங்காய் கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் நன்றாக ஒரு பதத்திற்கு வந்ததும் முந்திரிப் பருப்பை போட்டு கிளற வேண்டும்
  10. அடுப்பை அணைத்து விட்டு தேங்காய் கலவையை எண்ணெய் தடவிய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
  11. தேங்காய் பர்பி நன்றாக சமப்படுத்தி விட வேண்டும்
  12. பின் உடனடியாக அதனை கத்தியின் உதவியால் சிறு சிறு துண்டுகளாக போட்டு வைக்கவும்
  13. ஐந்து நிமிடம் கழித்து தேங்காய் பர்பி ஆனது எடுப்பதற்கு எளிதாக மிகவும் சுவையானதாக இருக்கும்
  14. தேங்காய் பர்பி தயார்
  15. இந்தப் பண்டிகை காலங்களில் நீங்களும் தேங்காய் பர்பி செய்து அசத்துங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்