வீடு / சமையல் குறிப்பு / பாலாடை பாயாசம்( திடீர் பாயாசம்)

Photo of palada payasam by Bena Aafra at BetterButter
945
1
0.0(0)
0

பாலாடை பாயாசம்( திடீர் பாயாசம்)

Nov-07-2018
Bena Aafra
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாலாடை பாயாசம்( திடீர் பாயாசம்) செய்முறை பற்றி

பாயாசம் என்றால் அனைவரும் விரும்பும் ஒன்று.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி-1கப்
  2. வாழை இலை
  3. உப்பு -தேவைக்கேற்ப
  4. தேங்காய் பால்-3கப்
  5. சர்க்கரை -1 1/2கப்
  6. முந்திரி-1ஸ்பூன்
  7. திராட்சை-1ஸ்பூன்
  8. நெய்

வழிமுறைகள்

  1. அரிசியை 1மணி நேரம் ஊறவைத்து உலர்த்தி எடுத்து கொள்ளவும்.
  2. அவற்றை மிக்ஸியில் அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
  3. அரிசி மாவில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து தோசமாவு பததில் கரைத்து கொள்ளவும்.
  4. அவற்றை வாழை இலையில் ஒரு கரண்டியில் எடுத்து ஊற்றி தேய்த்துவிட்டு வாழை இலையை சுருட்டிக் கொள்ளவும்.
  5. அவற்றை வாழை நாரில் கட்டி ,ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
  6. சுருட்டிய இலையை சுடு நீரில் வைத்து வேக விடவும்.
  7. 10நிமிடம் வெந்ததும் வெளியே எடுத்து அவற்றை கத்தியால் கட் செய்து வைத்து கொள்ளவும்.
  8. இப்பொழுது பாலாட தயார்.
  9. அவற்றை தண்ணீரில் அலசி எடுத்து உலரவைத்து கொள்ளவும்.
  10. பாலாட பாயாசம்::::
  11. அடுப்பில் பாத்திரம் வைத்து நெய் விட்டு முந்திரி ,திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.
  12. தேங்காய் பால் எடுத்து கொள்ளவும்.
  13. முதல் எடுத்த தேங்காய் பாலுடன் 1கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
  14. சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.
  15. நன்றாக கொதித்ததும் பாலாடையை சேர்த்து கொதிக்க விட்டு வேகவைக்கவும்.
  16. பின் இரண்டாவது பாலை ஊற்றி கொதிக்க விட்டு ,வறுத்த முந்திரி ,திராட்சை ,ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து இறக்கவும்.
  17. சூடான சுவையான பாலாட பாயாசம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்