வீடு / சமையல் குறிப்பு / சாக்கோ வீட் பாதுஷா

Photo of Choco wheat Bhadusha by Rachell Revathi Samuel at BetterButter
152
1
0.0(0)
0

சாக்கோ வீட் பாதுஷா

Nov-13-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சாக்கோ வீட் பாதுஷா செய்முறை பற்றி

சாக்லேட் சிரப் சேர்த்து கோதுமை மாவில் செய்யப்படும் புதுஷா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு 1/2 கப்
  2. பேக்கிங் சோடா ஒரு பின்ச்
  3. பேக்கிங் பவுடர் 1 ஸ்பூன்
  4. வெண்ணெய் 1 ஸ்பூன்
  5. தயிர் 1 -2 ஸ்பூன்
  6. சாக்கோ சிரப் 1-3 ஸ்பூன் (விருப்பத்திற்கு ஏற்ப)
  7. உப்பு ஒரு சிட்டிகை
  8. பால் 3-5 ஸ்பூன்
  9. சர்க்கரை 1/2 கப்
  10. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு தயிர் வெண்ணெய் பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் சாக்கோ சிரப் உப்பு அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும்.
  2. அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  3. பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.. நீண்ட நேரம் பிசைய வேண்டிய அவசியம் இல்லை.
  4. சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  5. விரல் வைத்து நடுவில் அழுத்தி கொள்ளவும்
  6. அடுப்பில் பாத்திரத்தை வைத்து சர்க்கரை மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  7. சிறு கம்பி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  8. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாதுஷாக்களை போட்டு சிம்மில் வைத்து வேக விடவும்.
  9. பாதுஷா வெந்ததும் சர்க்கரை பாகில் போடவும்.குறைந்தபட்சம்‌ 30 நிமிடங்கள் பாகில் வைக்கவும்.
  10. பாதுஷாவில் சர்க்கரை பாகு ஏறியதும் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்