வீடு / சமையல் குறிப்பு / பண்டிகைகால ஸ்வீட் வகைகள்

Photo of festival sweets by sandya Raj at BetterButter
778
1
0.0(0)
0

பண்டிகைகால ஸ்வீட் வகைகள்

Nov-13-2018
sandya Raj
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பண்டிகைகால ஸ்வீட் வகைகள் செய்முறை பற்றி

பண்டிகை காலங்களில் செய்யப்படும் ஸ்வீட் வகைகள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஹைதராபாத்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. அதிரசம் செய்ய
  2. பச்சரிசி மாவு ஒரு கப்
  3. எண்ணை பொரிப்பதற்கு
  4. வெல்லம் அரை கப்
  5. பால்கோவா செய்ய
  6. பால் ஒரு லிட்டர்
  7. சர்க்கரை ஒரு கப்
  8. கோதுமை அல்வா செய்ய
  9. கோதுமை மாவு 2 கப்
  10. சர்க்கரை முக்கால் கப்
  11. நெய் தேவையான அளவு
  12. மைதா மாவு அப்பம் செய்ய
  13. மைதா மாவு ஒரு கப்
  14. சர்க்கரை 4 மேஜைக்கரண்டி
  15. ரவை ஒரு ஸ்பூன்
  16. எண்ணெய் பொரித்தெடுக்க
  17. ரவா லாடு செய்ய
  18. ரவை ஒரு கப்
  19. சர்க்கரை கால் கப்
  20. நெய் தேவையான அளவு
  21. கார முறுக்கு செய்ய
  22. அரிசி மாவு ஒரு கப்
  23. உப்பு தேவையான அளவு
  24. மிளகாய் வத்தல் பொடி ஒரு ஸ்பூன்
  25. எள்ளு சிறிதளவு
  26. உளுத்தம் மாவு 2 ஸ்பூன்
  27. எண்ணை பொரித்தெடுக்க

வழிமுறைகள்

  1. அதிரசம் செய்ய பச்சரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. ஒரு மணி நேரத்திற்கு பிறகு தண்ணீரை வடிகட்டி அதை உலர வைக்கவும்
  3. பிறகு அதை மாவு மிஷினில் கொடுத்து இடித்துக் கொள்ளவும்
  4. பிறகு வெல்லத்தை தண்ணீர் சேர்த்து பாகு வைத்துக் கொள்ளவும்
  5. அதனுடன் அரிசி மாவை சேர்த்துக் கிளறவும்
  6. கெட்டியாக கிளறவும்
  7. பிறகு சிறு உருண்டை எடுத்து அதிரசம் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  8. ரவா லட்டு செய்ய
  9. சர்க்கரையை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்
  10. பொடித்த சர்க்கரையும் ரவையையும் சேர்த்து கலக்கவும்
  11. சூடான நெய்யை அதில் ஊற்றி உருண்டை பிடித்துக் கொள்ளவும்
  12. கோதுமை அல்வா செய்ய
  13. ஒரு கப் கோதுமை மாவை தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்
  14. பிசைந்ததை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மணி நேரம் ஊற வைக்கவும்
  15. பிறகு நன்கு கரைத்துக் கொள்ளவும்
  16. கோதுமை பாலை தனியாக எடுத்து சக்கையை தனியாக எடுத்து வைக்கவும்
  17. வாணலியில் நெய் ஊற்றி
  18. முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  19. பிறகு கோதுமை பாலை சேர்த்து நன்கு கிளறவும்
  20. மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து பாகு வைத்துக் கொள்ளவும்
  21. அதை கோதுமை பாலுடன் சேர்த்து கிளறவும்
  22. கெட்டி பதம் வந்தவுடன் இறக்கவும் முந்திரியை தூவி கொள்ளவும்
  23. கார முறுக்கு செய்ய
  24. அரிசி மாவு உளுத்த மாவு உப்பு மிளகாய் பொடி எள்ளு இவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  25. முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து கொள்ளவும்
  26. வாணலியில் எண்ணெய் ஊற்றி முறுக்கு சுட்டெடுக்கவும்
  27. மைதா மாவு அப்பம் செய்ய
  28. மைதா மாவு சர்க்கரை ரவை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  29. பிறகு அதை அப்பம் போல் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  30. பால்கோவா செய்ய
  31. பாலை வாணலியில் ஊற்றி சுண்ட காய்ச்சவும்
  32. கெட்டி பதம் வரும் வரை கிளறவும்
  33. பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்