வீடு / சமையல் குறிப்பு / மஷ்ரூம் உருளைக்கிழங்கு பொரிச்ச குழம்பு

Photo of Mushroom Potato poricha Kuzhambu by Jayasakthi Ekambaram at BetterButter
814
0
0.0(0)
0

மஷ்ரூம் உருளைக்கிழங்கு பொரிச்ச குழம்பு

Nov-16-2018
Jayasakthi Ekambaram
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மஷ்ரூம் உருளைக்கிழங்கு பொரிச்ச குழம்பு செய்முறை பற்றி

நம் விருப்பப்பட்ட காய்கறிகளை வைத்து செய்யும் புளி சேர்க்காத குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மஷ்ரூம் 6
  2. சிறிய உருளைக்கிழங்கு 4
  3. வெங்காயம் ஒன்று
  4. தக்காளி-2
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
  6. சோம்புத்தூள் அரைடீஸ்பூன்
  7. குழம்பு மிளகாய்த்தூள் 3 ஸ்பூன்
  8. கல் உப்பு ஒரு டீஸ்பூன்
  9. எண்ணெய் 4 ஸ்பூன்
  10. கறிவேப்பிலை ஒரு கொத்து
  11. தேங்காய் விழுது 1 கப்
  12. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அடுப்பில் 2 லிட்டர் குக்கரை வைத்து 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்
  2. எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட் சோம்புத் தூள் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்
  4. சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கிய மஷ்ரூமை போட்டு வதக்கவும்
  5. தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
  6. மிளகாய்த் தூள் உப்பு தூள் மஞ்சள் தூள் சேர்க்கவும்
  7. பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்
  8. சிறிய துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து குக்கரை மூடவும்
  9. மூன்று விசில் வந்ததும் குக்கரை ஆப் செய்யவும்
  10. ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து தேங்காய் பேஸ்டை ஊற்றவும்
  11. ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை ஆப் செய்யவும்
  12. பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்