வீடு / சமையல் குறிப்பு / நிலக்கடலை சாதம்

Photo of Peanut rice by Rachell Revathi Samuel at BetterButter
450
1
0.0(0)
0

நிலக்கடலை சாதம்

Nov-27-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

நிலக்கடலை சாதம் செய்முறை பற்றி

நிலக்கடலை மிகவும் சத்தானது.அதை வைத்து சாதம் செய்யும் முறை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வறுத்து அரைக்க: எண்ணெய் 1 ஸ்பூன்
  2. நிலக்கடலை 4-5 ஸ்பூன்
  3. உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன்
  4. மிளகாய் வற்றல் 2
  5. தேங்காய் துருவல் 1/4 கப்
  6. தாளிக்க: எண்ணெய் 2 ஸ்பூன்
  7. கடுகு 1/4 ஸ்பூன்
  8. கருவேப்பிலை சிறிது
  9. நிலக்கடலை 2 ஸ்பூன்
  10. சாதம் 1 கப்
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பு மற்றும் நிலக்கடலை சேர்த்து வறுக்கவும்.
  2. மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
  3. தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
  4. நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்து விடவும்.
  5. 2 நிமிடத்திற்கு பிறகு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
  7. கடுகு வெடித்ததும் நிலக்கடலை மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  8. சாதம் சேர்த்து பின் அரைத்த விழுதை சேர்க்கவும்.
  9. நன்றாக கலந்து உப்பு சேர்த்து கொள்ளவும்.அனைத்தையும் கலந்து அடுப்பில் இருந்து இறக்கவும்.
  10. சாதம் குக்கரில் 10-15 நிமிடங்களில் செய்து விடலாம். சாதம் அடுப்பில் வைத்தவுடன் நிலக்கடலை வறுத்து அரைத்து விட்டால் 20 நிமிடங்களில் நிலக்கடலை சாதம் தயார்.
  11. சுவையான சத்தான நிலக்கடலை சாதம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்