Photo of Set Dosa by Anjana Chaturvedi at BetterButter
5292
642
4.5(0)
0

செட் தோசை

Aug-27-2015
Anjana Chaturvedi
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • ஆந்திரப்ரதேஷ்
  • ரோசஸ்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. பச்சரிசி - 3 கப்
  2. அவல் - 3/4 கப்
  3. உளுந்து - 1/4 கப்
  4. ஜவ்வரிசி - 1.5 தேக்கரண்டி
  5. வெந்தயம் - 1 தேக்கரண்டி
  6. தயிர் - 3/4 கப்
  7. தண்ணீர் தோராயமாக 1.5 கப்
  8. சமையல் சோடா மாவு - 1/2 தேக்கரண்டி
  9. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. அரிசியையும் உளுந்தையும் நன்றாகக் கழுவிக்கொள்க. ஒரு கிண்ணத்தில் அரிசி, உளுந்து, வெந்தயம், அவல் ஆகியவற்றைத் தண்ணீரில் தோராயமாக 5-6 மணி நேரம் ஊறவைக்கவும். தயிர், தண்ணீர் சேர்த்து மோர் தயாரித்துக்கொள்ளவும். (மாற்றாக லபானைப் பயன்படுத்தலாம்)
  2. ஊறவைத்த பருப்பு அரிசிக் கலவையிலிருந்து தண்ணீரை வடிக்கட்டி அதன்பின்னர் தயிர் கலவையோடு ஊறவைத்தப் பொருள்களை (மோர்) மென்மையான மாவாக (ஊற்றும் பதத்திற்கு) அரைத்துக்கொள்ளவும்.
  3. கலவையோடு உப்பையும் சமையல் சோடா மாவையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். மூடி இரவு முழுவதும் அல்லது தோராயமாக 8 மணி நேரங்கள் நொதிக்க வைக்கவும். கனமான வார்ப்பிரும்பை அல்லது தட்டையான நான் ஸ்டிக் தவாவைச் சூடுபடுத்திக்கொள்க.
  4. தண்ணீரில் தொய்த்த ஒரு துணியால் துடைத்துவிட்டு கொஞ்சம் எண்ணெய் விடுக. இப்போது 2 கரண்டி மாவைச் சூடானத் தவாவில் விடுக. மொத்தமான பேக் கேக் போல அதுவாகப் பரவட்டும், கரண்டியால் பரவச் செய்யத் தேவையில்லை.
  5. மிதமானச் சூட்டில் வேகட்டும். அதன் பக்கங்களில் கொஞ்சம் எண்ணெய்த் தெ ளிக்கவும். 1.5ல் இருந்து 2 நிமிடங்கள் வேகட்டும்.
  6. அதன்பின்னர் திருப்பிப்போட்டு மேலும் 1 நிமிடம் வேகவைக்கவும். மேற்கொண்டு வேகவைக்கத் தேவையில்லை. தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, ரசத்தோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்