வீடு / சமையல் குறிப்பு / காய்கறி குருமா

Photo of Vegetables kurma by sudha rani at BetterButter
436
0
0.0(0)
0

காய்கறி குருமா

Dec-11-2018
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காய்கறி குருமா செய்முறை பற்றி

சப்பாத்தி பூரிக்கு செய்து தருவாங்க இந்த கிரேவி உடைய மணத்திற்கே இன்னும் 4 பூரி கூட சாப்பிட தோன்றும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் 1 கப்
  2. பட்டாணி 1 கப்
  3. பீன்ஸ் 1/2 கப்
  4. பெரிய வெங்காயம் 4
  5. இஞ்சி பூண்டு விழுது 3 ஸ்பூன்
  6. கறிவேப்பிலை சிறிது
  7. மல்லித்தழை
  8. பச்சை மிளகாய் 3
  9. மல்லித்தூள் 2 ஸ்பூன்
  10. சீரகத்தூள் 2 ஸ்பூன்
  11. கறிமசால் தூள் 2 ஸ்பூன்
  12. சாம்பார் பொடி 1 ஸ்பூன்
  13. மிளகாய்த்தூள் 1/4 ஸ்பூன்
  14. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  15. சோம்பு தூள் 1/4 ஸ்பூன்
  16. உப்பு தேவையான அளவு
  17. எண்ணெய் தேவையான அளவு
  18. கடுகு 1 ஸ்பூன்
  19. அரைக்க:
  20. தேங்காய் துருவல் 5 டேபிள்ஸ்பூன்
  21. முந்திரி 4
  22. பட்டை 2
  23. கிராம்பு 2
  24. ஏலக்காய் 2
  25. பிரியாணி இலை 1
  26. தக்காளி 7
  27. சின்ன வெங்காயம் 1/2 கப்
  28. பொட்டுக்கடலை 2 ஸ்பூன்
  29. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. மசாலா அரைக்க:
  2. முந்திரியை 20 நிமிடங்கள் வரை ஊறவிடவும்
  3. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்
  4. பின் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  5. பின் தக்காளியை தனியாக வதக்கவும்
  6. பின் வெங்காயம் மற்றும் தக்காளி தேங்காய் துருவல் முந்திரி பொட்டுக்கடலை ஆகியவற்றை விழுதாக அரைத்து எடுக்கவும்
  7. கிரேவி:
  8. கேரட் பீன்ஸ் மற்றும் பட்டாணியை சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும்
  9. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  10. வெங்காயம் பொன்னிறமாக வதக்கி பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  11. பின் வேகவைத்த காய்கறிகள் மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு வதக்கவும்
  12. பின் அரைத்த விழுது சேர்த்து சிறிது நேரம் வரை வதக்கவும்
  13. பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்