வீடு / சமையல் குறிப்பு / வரகு அரிசி காய்கறி புலாவ்

Photo of Varagu veg pulao by Karuna pooja at BetterButter
523
1
0.0(0)
0

வரகு அரிசி காய்கறி புலாவ்

Dec-11-2018
Karuna pooja
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வரகு அரிசி காய்கறி புலாவ் செய்முறை பற்றி

வரகு அரிசியை பயன்படுத்தி பலாவ் செய்ய அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வரகு அரிசி 1/2 கி
  2. சின்ன வெங்காயம் 100
  3. பூண்டு 10 பல்
  4. பச்சை மிளகாய் 5
  5. நெய் ஒரு ஸ்பூன்
  6. பட்டை ஒரு சிறிய துண்டு
  7. கிராம்பு-2
  8. ஏலக்காய்-2
  9. கேரட் 50 கிராம்
  10. பீன்ஸ் 50 கிராம்
  11. பச்சை பட்டாணி 25 கிராம்
  12. கல் உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு இதை பேஸ்டாக அரைக்கவும்.
  2. சிறிதளவு நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் பொரியவிடவும்
  3. அவை பொரிந்தவுடன் அரைத்த விழுதினை சேர்க்கவும்
  4. இந்த விழுதினை பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கி விடவும்....
  5. வரகு அரிசியின் இரண்டு மடங்கு அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்
  6. கொதித்த பின்பு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
  7. கொதித்த பின்பு வரகு அரிசியை சேர்க்கவும்...
  8. கலந்து தன் பதம் வந்ததும் மூடி வைக்கவும்.
  9. ஒரு விசில் விட்டு மீண்டும் பத்து நிமிடம் சிறிய தீயில் வைத்து இறக்கவும்
  10. பத்து நிமிடம் கழித்து திறந்து மீண்டும் ஒரு முறை கிளறி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்