Photo of Thavala adai by Krishnasamy Vidya Valli at BetterButter
323
0
0.0(0)
0

தவல அடை

Dec-12-2018
Krishnasamy Vidya Valli
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

தவல அடை செய்முறை பற்றி

பாரம்பரியமான ரெசிபி இது. ரெகுலர் அடை போன்று பருப்புகள் அரிசி சேர்த்து செய்யபடுவதுதான். ஆனால் செய்முறை மற்றும் சில இடுபொருட்கள் வேறுபடும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. பச்சரிசி 11/2 கப்
  2. கடலைப்பருப்பு 1/4 கப்
  3. துவரம் பருப்பு 1/4 கப்
  4. உருட்டு உளுந்து 1/4 கப்
  5. புளித்த மோர் 1 கப்
  6. உப்பு 11/2 தேக்கரண்டி
  7. மிளகாய் வத்தல் 5 முதல் 7
  8. பெருங்காயம் 1/2 தேக்கரண்டி
  9. தாளிக்க
  10. நெய் 1 தேக்கரண்டி
  11. கடுகு 1 தேக்கரண்டி
  12. கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
  13. உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி
  14. கருவேப்பிலை 4 ஆர்க்கு
  15. மிளகு சீரகம் தலா 1 தேக்கரண்டி ஒன்று இரண்டாக தட்டி போடவும்
  16. தேங்காய் துருவல் 3 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. அரிசி பருப்பை களைந்து பத்து நிமிடங்கள் அப்படியே வைத்து பின்னர் ஒரு துணியில் அரைமணிநேரம் காயவிடவும்
  2. அதோடு மோர் உப்பு பெருங்காயம் மிளகாய் வற்றல் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து அரைத்த மாவில் சேர்க்கவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு மாவுவிட்டு வார்த்து எடுக்கவும். எண்ணெய் அதிகம் விடாமல் மூடிவைத்தும் வேகவிடவும்
  5. சூடாக சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்