சோள சலாத் | Corn Salad in Tamil

எழுதியவர் Shilpa Manocha  |  4th Aug 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Corn Salad by Shilpa Manocha at BetterButter
சோள சலாத்Shilpa Manocha
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

264

0

சோள சலாத் recipe

சோள சலாத் தேவையான பொருட்கள் ( Ingredients to make Corn Salad in Tamil )

  • இனிப்பு சோளம் 1 கப்
  • நறுக்கிய பச்சை குடமிளகாய் 1/2 கப்
  • நறுக்கிய மஞ்சள் குடமிளகாய் 1/2 கப்
  • நறுக்கிய சிவப்பு குடமிளகாய் 1/2 கப்
  • பச்சைப் பட்டாணி 1/2 கப்
  • நறுக்கிய அன்னாசி 1/2 கப்
  • நறுக்கிய திராட்சை 1/2 கப்
  • மாதுளை விதைகள் 1/2 கப்
  • மையோனைஸ் 2 தேக்கரண்டி
  • ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி
  • சுவைக்கேற்ற உப்பு
  • கருமிளகு சுவைக்காக
  • தேன் 1 தேக்கரண்டி (விருப்பம்)

சோள சலாத் செய்வது எப்படி | How to make Corn Salad in Tamil

  1. இனிப்புச் ளேத்தையும் பட்டாணியையும் கொதிக்கும் நீரில் 5ல் இருந்து 10 நிமிடங்கள் சற்றே மிருதுவாக்க வேகவைக்கவும்.
  2. மிருதுவானதும், தண்ணீரை வடிக்கட்டி அவற்றை ஆறவிடவும்.
  3. ஒரு பெரிய சலாத் பரிமாறும் பாத்திரத்தில், நறுக்கிய குடமிளகாய், திராட்சை, அன்னாசி மற்றும் வடிக்கட்டி சோளம்/பட்டாணியைச் சேர்க்கவும்.
  4. மையோனைஸ் சேர்த்து காய்கறிகளை மயோவால் பூசூவதற்கு நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  5. இப்போது உப்பு, மிளகு சேர்க்கவும். கொஞ்சம் தேன், ஆலிவ் எண்ணெய் ஊற்றவும்.
  6. நன்றாகக் கலந்துகொள்ளவும், ஆனால் வேகமானச் செயல்பாட்டைத் தவிர்க்கவும். மெதுவாகக் கலந்துகொள்ளவும்.
  7. கொஞ்சம் சுவைபார்த்து, உப்பு மிளகைச் சரிப்பார்க்கவும்.
  8. ஒரு கிளிங் உறையால் மூடி குளிர்விப்பதற்கு பிரிஜ்ஜில் வைக்கவும்.
  9. சுவை நன்றாகக் கலந்திருக்கும், இப்போது கொஞ்சம் நறுக்கிய கொத்துமல்லியால் அலங்கரித்துச் சில்லென்று பரிமாறவும். (மாதுளையாளும்கூட நீங்கள் அலங்கரிக்கலாம், இது விருப்பம் சார்ந்தது)

எனது டிப்:

சலாத்தை சில்லென்று பரிமாறவும். சற்றே இனிப்பு சுவைக்கொடுக்க தேனைச்சேர்க்கலாம்.

Reviews for Corn Salad in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.