வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு சிக்கன் குழம்பு

Photo of Chettinad chicken Curry by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
702
2
5.0(0)
0

செட்டிநாடு சிக்கன் குழம்பு

Dec-29-2018
Wajithajasmine Raja mohamed sait
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு சிக்கன் குழம்பு செய்முறை பற்றி

செட்டிநாடு சிக்கன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் -400 கிராம்
  2. வெங்காயம்-1 பொடியாக நறுக்கியது
  3. தக்காளி -2 பொடியாக நறுக்கியது
  4. பச்சை மிளகாய்-2
  5. இஞ்சி பூண்டு விழுது -1 1/2தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
  7. மிளகாய் தூள் -1/2 தேக்கரண்டி
  8. கருவேப்பிலை-சிறிதளவு
  9. மல்லி இலை்-சிறிதளவு
  10. நல்லெண்ணெய் -1 தேக்கரண்டி
  11. நெய் -2 தேக்கரண்டி
  12. உப்பு - தேவையான அளவு
  13. வறுத்து அரைக்க :
  14. மல்லி-2 தேக்கரண்டி
  15. சீரகம்-1 தேக்கரண்டி
  16. பெருஞ்சீரகம் -3/4 தேக்கரண்டி
  17. மிளகு - 1/2 தேக்கரண்டி
  18. வரமிளகாய்-4
  19. பட்டை - 1 துண்டு
  20. ஏலக்காய்- 3
  21. கிராம்பு-4
  22. பிரியாணி இலை - 1/2 இலை
  23. தேங்காய் துருவல் -4 தேக்கரண்டி
  24. முந்திரி - 4

வழிமுறைகள்

  1. முதலில் அடுப்பில் கடாயை வைத்து சூடானதைம் அதில் வறுத்து அரைக்க தேவையான்பொருட்கள் அனைத்தையும் சேர்த்து எண்ணெய் இல்லாமல் வறுத்துக்கொள்ளவும்.
  2. தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  3. வறுத்த மசாலா பொருட்களை மிக்சியில்சேர்த்து பொடியாக்கிக்கொள்ளவும்.
  4. அதேபோல் தேங்காய் துருவல், முந்திரி 4 சேர்த்து மிக்சியில் மையாக அரைத்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் குக்கரை வைத்து சூடானதும் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் ,2 தேக்கரண்டி நெய் சேர்க்கவும்.பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் ,சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  6. வெங்காயம் நன்கு வதங்கியதும் 1 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  7. இப்பொழுது நறுக்கி வைத்துள்ள தக்காளி, பச்சை மிளகாய் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  8. தக்காளி நன்கு மசிந்ததும் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்,1/2 தேக்கரண்டி மிளகாய்தூள் ,அரைத்து வைத்துள்ள மசால்பொடியை சேர்த்து நன்கு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  9. பின்பு 400 கிராம் சிக்கனை சேர்த்து நன்கு மசாலாவுடன் கலந்து விடவும்.
  10. 1 கப் தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 விசில் குக்கரில் வேகவிடவும்.
  11. விசில் அடங்கியதும் குக்கரை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் முந்திரி விழுதை சேர்க்கவும்.
  12. நன்கு தேங்காய் விழுதை கலந்து விட்டு குக்கரை மூடி மீண்டும் ஒரு விசில் வேகவிடவும்.
  13. விசில் அடங்கியதும் குக்கரை திறந்து சிறிதளவு மல்லி இலை சேர்க்கவும்.
  14. சுவையான செட்டிநாடு சிக்கன் குழம்பு தயார்.சப்பாத்தி, நான், பரோட்டா , ரைஸ், நெய் சோறு அனைத்துக்கும் மிக அருமையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்