வீடு / சமையல் குறிப்பு / கேரட் டேட்ஸ் கேக்

Photo of Carrot dates cake by rejaz shiya at BetterButter
403
0
0.0(0)
0

கேரட் டேட்ஸ் கேக்

Jan-09-2019
rejaz shiya
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் டேட்ஸ் கேக் செய்முறை பற்றி

இது மிகவும் சுலபமான முறையில் செய்யக்கூடிய ஒரு கேக் மேலும் மிகவும் ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு 1 1/2 கப்
  2. வெஜிடபிள் ஆயில் 3/4 கப்
  3. சர்க்கரை முக்கால் கப்
  4. கேரட் துருவியது ஒரு கப்
  5. பேரிச்சம்பழம் முக்கால் கப்
  6. கேரமல் செய்வதற்கு சீனி கால் கப்
  7. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் ஒரு ஸ்பூன்
  8. பேக்கிங் பவுடர் ஒன்றரை ஸ்பூன்
  9. பேக்கிங் சோடா அரை ஸ்பூன்
  10. முட்டை 3
  11. பால் அரை கப்

வழிமுறைகள்

  1. முதலில் மைதா மாவு பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் மூன்றையும் கலந்து வைத்துக் கொள்ளவும்
  2. மிக்ஸி ஜாரில் எண்னை மற்றும் சர்க்கரை சேர்த்து அடித்து வைத்து கொள்ளவும்
  3. பின்பு அதில் ஒவ்வொரு முட்டையாக ஊற்றி அடித்து வைத்துக் கொள்ளவும்
  4. அதனுடன் பேரிச்சம் பழத்தை சிறிது சிறிதாக சேர்த்து அடிக்கவும்
  5. பின்பு அதில் துருவிய கேரட்டை போட்டு மிகவும் அடித்துக் கொள்ளவும்
  6. பின்பு தனியாக ஒரு பேன்எடுத்து அதில் கால் கப் சர்க்கரை மற்றும் தண்ணீர் ஊற்றி கேரமில்லை பண்ண வேண்டும்
  7. கேரமெல் பண்ணும் போது அடுப்பை எப்பொழுதும் மிதமான சூட்டில் வைத்திருக்க வேண்டும்
  8. பின்பு அந்த கேரட் பேரீத்தம்பழம் கலவையுடன் மைதா மாவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கிளறவும்
  9. இத்துடன் மணத்திற்காக வெண்ணிலா எசன்ஸ் மற்றும் கேரமல் கலவையை நன்றாக மிக்ஸ் செய்து நன்றாக கிளறவும்
  10. ப்ரீஹீட் செய்யப்பட்ட ஓவனில் 30 நிமிடம் 180 டிகிரி செல்சியஸில் வைத்து எடுக்கவும்
  11. இப்போது சுவையான கேரட் கேக் தயார் மிகவும் ஆரோக்கியமானது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்