Photo of Watalappam by Rabia Hamnah at BetterButter
364
2
0.0(0)
0

வட்டலப்பம்

Jan-12-2019
Rabia Hamnah
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வட்டலப்பம் செய்முறை பற்றி

எந்த ஒரு பார்ட்டியாக இருந்தாலும் விருந்தினர்கள் வந்தாலும் இஸ்லாமியர்கள் முதலில் செய்வது மட்டுமே ஆகும் அந்த வட்டத்தை பற்றி இப்பொழுது பார்ப்போம்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்ரீலங்கன்
  • ஈஸி
  • ஈத்
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை -4
  2. தேங்காய் -1
  3. சீனி -1 பவுல்
  4. ஏலக்காய்- 8
  5. பாதாம் -10
  6. முந்திரி-10
  7. நெய்- 3 ஸ்பூன்
  8. உப்பு -ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. முட்டையை உடைத்து ஒரு பவுலில் அளந்து வைக்கவும்
  2. தேங்காயுடன் ஏலக்காய் சேர்த்து அரைத்து பால் பிழிந்து கொள்ளவும்
  3. தேங்காய் பால் கெட்டியாக இருக்க வேண்டும் தேவைப்பட்டால் ஒரு கரண்டி மட்டும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
  4. தேங்காய் பாலை முட்டை அளந்த பவுலில் தேங்காய்ப்பால் ஒரு கப் அலந்து வைக்கவும்
  5. சீனியை முட்டை அளந்த பவுலில் எடுத்து வைக்கவும்
  6. பாதாம் முந்திரியை மிக்ஸியில் சேர்த்து நன்றாக பவுடராக பொடித்துக் கொள்ளவும்
  7. ஒரு பெரிய பௌலில் முட்டை சீனி தேங்காய் பால் சேர்த்து சீனி கரையும் வரை கரைத்து வைக்கவும்
  8. சீனி நன்கு கரைந்தவுடன் ருசி பார்க்கும் தேவைப்பட்டால் கொஞ்சம் சீனி சேர்த்து கரைத்துக் கொள்ளலாம்
  9. பொடித்த பாதாம் முந்திரியை சேர்த்து கலக்கவும்
  10. இரண்டு ஸ்பூன் நெய் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்
  11. ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து எல்லா இடமும் படும்படி நன்றாக தடவிக் கொள்ளவும்
  12. நெய் சேர்த்த பாத்திரத்தில் முட்டை கலவையை ஊற்றவும்
  13. ஒரு பெரிய குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஸ்டான்ட் போட்டு வைக்கவும்
  14. பின்பு வட்டலப்பம் கலவை உள்ள பாத்திரத்தை குக்கரில் வைத்து மூடி போடவும்
  15. மூடியின் மேல் ஏதேனும் வெயிட்டான பொருளை வைக்கவும்
  16. பின்பு குக்கரை மூடி விசில் போட்டு 2 விசில் மீடியம் தீயில் வைத்து வேக வைக்கவும்
  17. இரண்டு விசில் வந்த பின்பு தீயை நன்றாக குறைத்துவிட்டு 25 நிமிடம் வேக வைக்கவும்
  18. பின்பு அடுப்பை அணைத்து ஆவி நன்றாக அடங்கும் வரை வைத்து விட்டு மூடியை திறந்து பார்க்கவும்
  19. ஒரு கத்தியை வைத்து குத்தி பார்க்கவும் ஒட்டாமல் வந்தால் வட்டலப்பம் நன்றாக வெந்து விட்டது என்று அர்த்தம்
  20. கொஞ்சம் ஆறிய பின்பு உங்களுக்கு வேண்டிய விருப்பம்போல் வெட்டி பரிமாறவும்
  21. ருசியான வட்டலப்பம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்