BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கிண்ணத்தப்பம்

Photo of Steamed rice cake by rejaz shiya at BetterButter
0
0
0(0)
0

கிண்ணத்தப்பம்

Jan-12-2019
rejaz shiya
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கிண்ணத்தப்பம் செய்முறை பற்றி

இது முஸ்லிம்களின் பிரசித்தி பெற்ற ஒரு சூப்பர் ஸ்னேக் ஆகும்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • కఠినము
  • ఈద్
  • దక్షిణ భారతీయ
  • ఆవిరికి
  • ప్రాథమిక వంటకం
  • తక్కువ కొవ్వు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கஞ்சிக்கு உபயோகப்படுத்தப்படும் அரிசி 2 கப்
  2. கட்டி தேங்காய் பால் 3கப்
  3. முட்டை வெள்ளை கரு 2
  4. ஏலக்காய் 8 முதல் 10
  5. சீனி தேவையான அளவு
  6. உப்பு ஒரு சிட்டிகை
  7. நெய் சிறிதளவு
  8. ஜீரகம் அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. முதலில் அரிசியை 5 முதல் 6 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்
  2. அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்
  3. தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பால்விட்டு நன்றாக அரைக்க வேண்டும் தோசை மாவு பதத்தை விட தனியாக அரைக்க வேண்டும்
  4. அரைக்கும் போதே கூடவே முட்டை சீனி மற்றும் ஏலக்காய் போட்டு நன்றாக அரைக்கவும்
  5. பின்பு அரைத்து வைத்த கலவையில் உப்பு சிறிதளவு போட்டு நன்றாக கலக்கி சர்க்கரை மற்றும் உப்பு சரியான அளவு இருக்கிறதா என்று சரி பார்க்கவும்
  6. பின்பு சல்லடை உபயோகப்படுத்தி மூன்று முதல் நான்கு தடவை நன்றாக அரிக்க வேண்டும்
  7. இட்லி பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்
  8. தண்ணீர் நன்றாக கொதித்ததும்
  9. ஒரு வட்ட பிளேட்டை எடுத்து அதில் நெய் தடவி இந்த கலவையை அதில் ஊற்றவேண்டும்
  10. உச்சியை கதவின் மேல் ஜீரகத்தை அலங்காரத்திற்காக போட வேண்டும்
  11. இப்போது இதை நன்றாக வேக வைத்து எடுக்கவும்
  12. வெந்தவுடன் ப்ளேட்டை வெளியே எடுத்து நன்றாக ஆறும் வரை வெளியே விட்டு பிறகு சிறுசிறு துண்டுகளாக
  13. கட் பண்ணி பரிமாறவும் சுவையான கிண்ணத்தப்பம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்