வீடு / சமையல் குறிப்பு / "வெள்ளரிக்காய் புளிஸேரி "

Photo of Cucumber pulissery " by Navas Banu L at BetterButter
388
1
0.0(0)
0

"வெள்ளரிக்காய் புளிஸேரி "

Jan-28-2019
Navas Banu L
1800 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

"வெள்ளரிக்காய் புளிஸேரி " செய்முறை பற்றி

அஸ்ஸலாமு அலைக்கும். வெள்ளரிக்கா புளிஸேரி தேவையான பொருட்கள் 1.ஒரு மீடியம் Size வெள்ளரிக்காய் - 1 2.கட்டி தயிர் - 1 கப் 3.பச்சை மிளகு - 4 அரைப்பதற்கு தேங்காய் திருகியது - 1 கப் மஞ்சள் பொடி - 1/2 teaspoon ஜீரகம் - 1/2 teaspoon தாளிப்பதற்கு எண்ணை - 2 table spoon கடுகு - 1/2 teaspoon வெந்தயம் - 1/2 teaspoon வற்றல் மிளகு - 3 கறிவேப்பிலை - 2 தண்டு. உப்பு தேவைக்கு. வெள்ளரிக்காயை தோல் நீக்கி சதுர துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் வைத்து அடுப்பில் வைக்கவும். அதில் வெள்ளரிக்காய் துண்டுகளை போட்டு அதில் கால் teaspoon மஞ்சள் பொடி, 1 teaspoon உப்பு போடவும். நான்கு பச்சைமிளகையும் கீறி அதனுடன் போட்டு பாத்திரம் மூடி வைத்து வேக வைக்கவும். மிக்ஸி ஜாரில் தேங்காய், மஞ்சள் பொடி, ஜீரகம் இட்டு வடிய அரைக்கவும். இந்த அரப்பை அடுப்பில் வெந்துக் கொண்டிருக்கும் வெள்ளரிக்காயில் சேர்த்து நன்றாகக் கிளறிக் கொடுத்து் கொதிக்க விடவும். அரப்பு அரைத்த ஜாரில் ஒரு கப் தயிரை விட்டு ஒரு கறக்கு லேசாக கறக்கிக் கொள்ளவும். நன்றாகக் கொதித்துக் கொண்டிருக்கும் வெள்ளரிக்காயில் தயிரைச் சேர்க்கவும்.அடுப்பை ஸிம்மில் வைக்கவும்.தயிர் சேர்த்தப் பிறகு கறியை கொதிக்க விடக்கூடாது.எல்லாம் நன்றாக மிக்ஸ் பண்ணிக் கொடுக்கவும். கறியில் ஆவி வந்ததும் இறக்கிவைக்கவும். எண்ணைச்சட்டி அடுப்பில் வைத்து 2 table spoon. எண்ணை ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், வற்றல் மிளகு, கறிவேப்பிலைப் போட்டு தாளித்து கறியில் சேர்த்து மிக்ஸ் பண்ணிக் கொள்ளவும். நன்றி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மீடியம் சைஸ் வெள்ளரிக்காய் - 1
  2. கட்டி தயிர் - 1 கப்
  3. பச்சை மிளகு - 4
  4. தேங்காய் திருவியது - 1 கப்
  5. மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூண்
  6. ஜீரகம் - 1/2 டீஸ்பூண்
  7. தாளிப்பதற்க்கு
  8. எண்ணை - 2 டேபிள் ஸ்பூண்
  9. கடுகு - 1/2 டீஸ்பூண்
  10. வெந்தயம் - 1/2 டீஸ்பூண்
  11. வற்றல் மிளகு - 3
  12. கறிவேப்பிலை - 2 தண்டு
  13. உப்பு தேவைக்கு.

வழிமுறைகள்

  1. 1.வெள்ளரிக்காயை தோல் நீக்கி சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  2. 2.ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் வைத்து அடுப்பில் வைக்கவும்.
  3. 3.அதில் வெள்ளரிக்காய் துண்டுகளைப் போட்டு 1/4 டீஸ்பூண் மஞ்சள் பொடி, 1 டீஸ்பூண் உப்பு போடவும். நான்கு பச்சை மிளகையும் கீறி அதனுடன் போட்டு பாத்திரம் மூடி வைத்து வேக வைக்கவும்.
  4. 4.மிக்ஸி ஜாரில் தேங்காய், மஞ்சள் பொடி, ஜீரகம் சேர்த்து வடிய அரைக்கவும்.
  5. 5.இந்த அரப்பை வெந்துக் கொண்டிருக்கும் வெள்ளரிக்காயில் சேர்த்து நன்றாகக் கிளறிக் கொடுத்து கொதிக்க விடவும்.
  6. 6.அரப்பு அரைத்த ஜாரில் ஒரு கப் தயிரை விட்டு ஒரு கறக்கு லேசாக கறக்கிக் கொள்ளவும்.
  7. 7. நன்றாகக் கொதித்துக் கொண்டிருக்கும் வெள்ளரிக்காயில் தயிரைச் சேர்க்கவும். அடுப்பை ஸிம்மில் வைக்கவும்.
  8. 8.தயிர் சேர்த்த பிறகு கறியைக் கொதிக்க விடக்கூடாது. எல்லாம் நன்றாக மிக்ஸ் பண்ணிக் கொடுக்கவும்.
  9. 9.கறியில் ஆவி வந்ததும் இறக்கி வைக்கவும்.
  10. 10.சீனசட்டி அடுப்பில் வைத்து எண்ணை விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், வற்றல் மிளகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கறியில் சேர்த்து மிக்ஸ் பண்ணிக் கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்