வீடு / சமையல் குறிப்பு / க்ரீமி எலுமிச்சை சிக்கன்

Photo of Creamy lemon chicken by Sumaiya Arafath at BetterButter
559
2
0.0(0)
0

க்ரீமி எலுமிச்சை சிக்கன்

Jan-29-2019
Sumaiya Arafath
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

க்ரீமி எலுமிச்சை சிக்கன் செய்முறை பற்றி

இந்த கிரீமி லெமன் சிக்கன் செய்வது மிகவும் எளிது.வாசனையும் சுவையும் நிறைந்த இந்த சிக்கன் ரொட்டி,மற்றும் பிரட்டிய காய்கறிகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஃப்யூஷன்
  • சிம்மெரிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோழியின் நெஞ்சுப் பகுதி 2
  2. மைதா மாவு 2 மேஜைக்கரண்டி
  3. ஓரிகேனொ 1/2 தேக்கரண்டி
  4. ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய்
  5. வெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  6. துருவிய பூண்டு 1 பல்
  7. சிகப்பு மிளகாய் பொடியாக நறுக்கியது 1
  8. சமையல் க்ரீம் ஒரு கப்
  9. எலுமிச்சை சாறு ஒரு மேஜைக் கரண்டி
  10. உப்பு தேவைக்கு
  11. நல்ல மிளகு தூள் ஒரு தேக்கரண்டி
  12. மல்லி இலை அலங்கரிக்க
  13. சிக்கன் ஸ்டாக் ஒரு கப்
  14. எலுமிச்சை அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்றாக சுத்தம் செய்து ஒரு கண்ணாடி தாளில் வைத்து நன்றாக இடிக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ஓரிகானோ, உப்பு,ந. மிளகு சேர்த்து மிக்ஸ் செய்து வைக்கவும்
  3. சிக்கனை மைதா கலவையில் பிரட்டி வைக்கவும்
  4. வாணலியில் வெண்ணெய் மற்றும் எண்ணை சேர்க்கவும்
  5. பிரட்டிய இறைச்சி அதில் போட்டு பொரித்தெடுக்கவும்
  6. இறைச்சி வெந்ததும் அதை மாற்றி எடுத்து வைக்கவும்
  7. சிக்கனை பொரித்த அதே எண்ணெயில் பூண்டு மற்றும் சிகப்பு மிளகாய் வாசம் வரும் வரை தாளிக்கவும்
  8. பிறகு சிறிது மைதா மாவை எடுத்து அதில் வேகவைக்கவும்
  9. பிறகு அதில் சிக்கன் ஸ்டாக் மற்றும் சமையல் கிரீம் சேர்த்து குறைந்த தீயில் நன்றாக வேகவைக்கவும்
  10. அதில் சிறிது மஞ்சள்தூள்,ந.மிளகு தூள்,உப்பு சேர்க்கவும்
  11. தேவைக்கு எலுமிச்சை நீர் சேர்க்கவும்
  12. பிறகு சிக்கன் துண்டுகளை அதில் போட்டு பிரட்டவும்
  13. சிறு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்
  14. வட்டமாக அரிந்த எலுமிச்சை மற்றும் மல்லி இலை போட்டு அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்