வீடு / சமையல் குறிப்பு / " நெத்திலி மீன் வடை "

Photo of " Nethili meen vadai " by Navas Banu L at BetterButter
729
0
0.0(0)
0

" நெத்திலி மீன் வடை "

Feb-17-2019
Navas Banu L
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

" நெத்திலி மீன் வடை " செய்முறை பற்றி

" நெத்திலி மீன் வடை " தேவையான பொருட்கள் சுத்தம் செய்து முள் நீக்கிய நெத்திலி மீன் - 100 கிராம் தேங்காய் - 1/2 மூடி பச்சைமிளகு - 3 சிறிய உள்ளி - 1 கப் இஞ்சி - ஒரு துண்டு மல்லி, புதினா, கறிவேப்பிலை நறுக்கியது - ஒரு கை நிறைய மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூண் மிளகு பொடி - 1 டீஸ்பூண் சோம்பு - 2 டீஸ்பூண் உப்பு தேவைக்கு பொரிப்பதற்க்கு எண்ணை செய்முறை 1. மேலே குறிப்பிட்ட எல்லா பொருட்களையும் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸி ஜாரில் தரு தருப்பாக அரைத்துக் கொள்ளவும் 2. அதில் உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். 3. கடாய் அடுப்பில் வைத்து சூடானதும் பொரிப்பதற்க்கு தேவையான எண்ணை ஊற்றி சூடானதும் அரைத்து வைத்திருக்கும் கலவையில் இருந்து ஒரு உருளை எடுத்து உருட்டி உள்ளங்கையில் வைத்து வடை போல் தட்டி எண்ணையில் போடவும். 4. ஒரு பக்கம் வெந்ததும் மறித்து போடவும். 5.மறுபக்கமும் வெந்து கோல்டன் ப்ரவுன் கலர் ஆகி வரும் போது எடுக்கவும். 6.மீதி கலவையை இது போல உருளைகளாக்கி கையில் வைத்து தட்டி வடை போல பொரித்து எடுக்கவும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • இந்திய
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சுத்தம் செய்து முள் நீக்கிய நெத்திலி மீன் - 100 கிராம்
  2. தேங்காய் - 1/2 மூடி ( துருவியது)
  3. பச்சை மிளகு - 3
  4. சிறிய உள்ளி - 1 கப்
  5. இஞ்சி - 1 துண்டு
  6. மல்லி, புதினா, கறிவேப்பிலை நறுக்கியது - ஒரு கைப்பிடி
  7. மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூண்
  8. மிளகு பொடி - 1 டீஸ்பூண்
  9. சோம்பு - 2 டீஸ்பூண்
  10. உப்பு - தேவைக்கு
  11. பொரிப்பதற்க்கு எண்ணை

வழிமுறைகள்

  1. 1. மேலேக் குறிப்பிட்ட எல்லாப் பொருட்களையும் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸி ஜாரில் தருதருப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  2. 2. அதில் உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்.
  3. 3. கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்க்கு தேவையான எண்ணை ஊற்றவும்.
  4. 4. எண்ணை சூடானதும் அரைத்து வைத்திருக்கும் கலவையில் இருந்து ஒரு உருளை எடுத்து உருட்டி உள்ளங்கையில் வைத்து வடை போல் தட்டி எண்ணையில் போடவும்.
  5. 5.ஒரு பக்கம் வெந்ததும் மறித்துப் போடவும்.
  6. 6. மறுபக்கமும் வெந்து கோல்டன் ப்ரவுன் கலர் ஆகி வரும் போது எடுக்கவும்.
  7. 7.மீதிக் கலவையை இதுபோல உருளைகளாக்கி கையில் வைத்து தட்டி வடை போல பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்