வீடு / சமையல் குறிப்பு / ரவைபனியாரம், மசால் வடை
ரவை பனியாரம் மசால் வடை ரவை பனியாரம் தேவையான பொருட்கள்: 1. ரவை - 1 கப் 2. மைதா - 1 கப் 3. சீனி - 1 கப் 4. வாழைப்பழம் - 1 சிறியது ( பூவன், கதலி,நாட்டுபழம்) 5.எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: 1. ரவையை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். 2. பின் அதனுடன் மைதா, சீனி பழம் சேர்த்து நன்கு பிசையவும் 3. தண்ணீர் சேர்க்க வேண்டாம். 4. பின் எண்ணெயை காய வைத்து , கரண்டியால் மாவை எடுத்து சிறு சிறு பனியாரமாக ஊற்றி எடுக்கவும். மசால் வடை தேவையான பொருட்கள்: 1. கடலைபருப்பு - 1 கப் 2. வெங்காயம் - 2 3. பச்சைமிளகாய் - 2 4. கருவேப்பிலை - சிறிதளவு 5. மல்லிதழை - சிறிதளவு 6. பட்டை - சிறுதுண்டு 7. சோம்பு - 1/2 ஸ்பூன் 8. இஞ்சி - சிறுதுண்டு 9. பூண்டு - 3 பல் 10. உப்பு - தேவையான அளவு 11. எண்ணெய் - தேவையான அளவு செய்முறை 1. கடலைப்பருப்பை தண்ணீரில் கழுவி விட்டு 2 மணி நேரம் நன்கு ஊற வைக்கவும். 2. பின் தண்ணரை நன்கு வடித்து வைக்கவும். 3. தண்ணீர் நன்கு வடிந்ததும் உப்பு சேர்த்து (நைஸாக அரைக்காமல் ) அரைத்து கொள்ளவும். 4. அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். 5. இஞ்சி, பூண்டு,பட்டை,சோம்பு இவை அனைத்தையும் நன்கு அரைத்து கொள்ளவும். 6. மாவில் சிறியதாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை, மல்லிதழை, அரைத்த விழுது இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும். 7. பின் எண்ணெயை காய வைத்து சிறிதளவு மாவு எடுத்து உள்ளங்கையில் வைத்து வடைகளாக தட்டி போடவும் 8. சிறு தீயில் வைத்து நன்கு வெந்து சிவந்த்தும் எடுக்கவும். 1. Rava - 1/2 cup 2. Maida - 1/2 cup 3. Sugar - 1/2 cup 4. Cardamom - 1, powdered 5. Salt - A pinch 6. Cooking soda - A generous pinch 7. Banana, optional - 1/2 8. oil - For frying Method 1. Soak rava minimum.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க