வீடு / சமையல் குறிப்பு / ரோட்டுக்கடை சென்னா மசாலா

Photo of Street Style Channa Masala by Ayesha Shifa at BetterButter
581
0
0.0(0)
0

ரோட்டுக்கடை சென்னா மசாலா

Mar-11-2019
Ayesha Shifa
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரோட்டுக்கடை சென்னா மசாலா செய்முறை பற்றி

எல்லோரும் விரும்பி உண்ணக்கூடிய ரோட்டுகடைகளில் கிடைக்ககூடிய ருசியான வெள்ளை கொண்டைக்கடலை மசால்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொண்டைக்கடலை 200 கிராம்
  2. தேங்காய் எண்ணெய் 3 மேஜைக்கரண்டி
  3. ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம்
  4. ஒரு துண்டு இஞ்சி பொடிதாக நறுக்கியது
  5. 8 பல் பூண்டு பொடிதாக நறுக்கியது
  6. 3 பச்சை மிளகாய்
  7. 2 முதல் 3 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  8. 4 தக்காளி மிக்ஸியில் நன்றாக அரைத்தது
  9. ஒரு மேசைக்கரண்டி காஷ்மீரி மிளகாய்த்தூள்
  10. ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள்
  11. ஒரு தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  12. ஒரு மேஜைக்கரண்டி சன்னா மசாலா
  13. ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லி இலை நறுக்கியது
  14. ஒரு கைப்பிடி அளவு புதினா இலை நறுக்கியது
  15. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

  1. 200 கிராம் கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு 2 தண்ணீரில் நன்கு அலசிய பின் அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு ஊற வைக்கவும். மறுநாள் காலையில் நன்கு ஊரியிருக்கும்.
  2. ஊற வைத்த கொண்டக்கடலையை அதே தண்ணீருடன் ஒரு பிரஷர் குக்கரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 4 முதல் 5 விசில் வைத்து எடுக்கவும்
  3. கொண்டைக்கடலை நன்றாக வெந்த பிறகு வேக வைத்த தண்ணீரையும் கொண்டைக்கடலையும் தனித்தனியாக பிரித்து எடுத்து வைக்கவும்
  4. ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்
  5. பெருஞ்சீரகம் சேர்த்து கரியாமல் வெடிக்க விடவும்
  6. நறுக்கிய இஞ்சி , பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  7. இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  8. பொடிதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து அது பாதி அளவு வதங்கும் வரை வதக்கவும்.
  9. பின்னர் அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.
  10. அதனுடன் உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.
  11. என்னை நன்றாக வெளியேறி மசாலா வாசனை முடங்கிய உடன் சென்னா மசாலா பொடி சேர்த்து கிளறி 2 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்.
  12. பின் நறுக்கிய கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து கிளறவும்.
  13. இப்போது வேக வைத்த கொண்டைக் கடலையில் முக்கால் பாகத்தை முழுதாக அப்படியே இதில் சேர்க்கவும்
  14. மீதமிருக்கும் கால் பாகம் கொண்டைக்கடலையை, கொண்டைக்கடலை வேக வைத்த தண்ணீரில் கொஞ்சம் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  15. அரைத்த கொண்டைக்கடலை விழுதையும் கடாயில் சேர்க்கவும்
  16. இப்போது கொண்டைக்கடலையை வேக வைத்த மீதமிருக்கும் தண்ணீரையும் சேர்த்து நன்கு எல்லாவற்றையும் ஒரு சேர நன்கு கலக்கவும்.
  17. ஒரு கிரேவி பதத்தில் இருப்பதுபோல் பார்த்துக் கொள்ள வேண்டும் தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கலாம்.
  18. பின்னர் ஒரு பத்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்
  19. நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான ரோட்டுக்கடை சென்னா மசாலா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்