வீடு / சமையல் குறிப்பு / தள்ளுவண்டி கூல் கூழ்

Photo of Thalluvandi cool koozh by Nazeema Banu at BetterButter
614
1
0.0(0)
0

தள்ளுவண்டி கூல் கூழ்

Mar-11-2019
Nazeema Banu
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தள்ளுவண்டி கூல் கூழ் செய்முறை பற்றி

கோடைக்கேற்ற குளு குளு கூழ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கூழுக்கு தேவையானவை
  2. கேழ்வரகு மாவு ஒரு கப்
  3. உப்பு தே.அளவு
  4. தயிர் அல்லது மோர் அரை கப்
  5. கருவாடு தொக்கு
  6. தேவையானவை
  7. வாழை மீன் கருவாடு இரண்டு துண்டுகள்
  8. மி.தூள் தே.அளவு
  9. பெ.வெங்காயம் ஒன்று
  10. ப.மிளகாய் 2
  11. எண்ணெய் தே.அளவு
  12. மோர் மிளகாய் வத்தல்
  13. தேவையானவை
  14. ப.மிளகாய் கால் கிலோ
  15. தயிர் அரை கப்
  16. கல் உப்பு சிறிது
  17. எண்ணெய் தே.அளவு

வழிமுறைகள்

  1. கூழ் செய்முறை.ஒரு கப் கேழ்வரகு மாவை தே.அளவு தண்ணீரில் கரைக்கவும்.
  2. அடுப்பை மிதமான தீயில் எரிய விட்டு கரைத்த மாவை கட்டிமில்லாமல் கிளறவும்.
  3. நன்கு வெந்து பச்சை வாசனை போனதும் உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
  4. அதை அப்படியே வைத்து காலையில் அதில் மோர் அல்லது தயிர் சேர்த்து சாப்பிடலாம்.
  5. கருவாடு தொக்கு. கருவாடு துண்டுகளை அரை மணி தண்ணீரில் ஊற வைக்கவும்.
  6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்துண்டுகளை வதக்கவும்.
  7. அதிலேயே ப.மிளகாய் சேர்த்து வதக்கி மி.தூள் சேர்க்கவும்
  8. இந்த கலவையை எடுத்து தனியே வைத்து விட்டு கடாயில் மீண்டும் சிறிது எண்ணெய் சேர்க்கவும்
  9. கருவாடு துண்டுகளை மி.தூள் புரட்டி எண்ணெயில் இருபுறமும் புரட்டி பொரிக்கவும்.
  10. அதிலேயே பொரித்த வெங்காயக் கலவை சேர்த்து புரட்டி விட்டு கலந்து விடவும்.
  11. கருவாடு தொக்கு ரெடி
  12. மோர் மிளகாய் வத்தல்.
  13. மிளகாயை பிளக்காமல் இலேசாய் கீறி வைக்கவும்.
  14. தயிரில் கல் உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.
  15. கீறிய மிளகாய்களை தயிரில் ஒரு நாள் முழுக்க ஊற விடவும்.
  16. மறு நாள் மிளகாய்களை ஒரு தட்டில் வைத்து வெயிலில் காய வைக்கவும்.
  17. மீதமுள்ள தயிரில் மீண்டும் மிளகாய்களை போட்டு வைக்கவும்.
  18. மறுநாள் அதே முறையில் மிளகாய்களை நல்ல வெயிலில் காய வைக்கவும்
  19. காய்ந்ததும் மிளகாய்களை ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.
  20. ஒரு கடாயில் மிதமான தீயில் எண்ணெயை காய வைக்கவும்.
  21. அதில் காய்ந்த மோர் மிளகாய்களை பொரிய விடவும்.
  22. கருக விடாமல் பொன்னிறமாய் பொரித்து எடுக்கவும்.
  23. அடுப்பை அணைத்து அந்த எண்ணெயிலேயே மிளகாய்களை போட்டு பிறகு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்