வீடு / சமையல் குறிப்பு / மொச்சைக்கொட்டை சுண்டல்

Photo of MOCHAIKOTTAI SUNDAL by Radha Balu at BetterButter
519
0
0.0(0)
0

மொச்சைக்கொட்டை சுண்டல்

Mar-26-2019
Radha Balu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மொச்சைக்கொட்டை சுண்டல் செய்முறை பற்றி

பீச்சில் மட்டுமன்றி சுண்டல் வகைகள் இப்பொழுது தெரு உணவாகவும் மாறிவிட்டது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மொச்சைக்  கொட்டை - 2 கப்(காய்ந்த மொச்சைக்கொட்டை எனில் முதல்நாள் இரவே ஊறவைக்கவும்)
  2. தேங்காய்த்  துருவல் - அரை கப்
  3. உப்பு - தேவையான  அளவு
  4. வறுத்து  பொடி  செய்ய...
  5. எண்ணை - 3 தேக்கரண்டி
  6. பெருங்காயம் - சிறு  துண்டு
  7. தனியா - 2 தேக்கரண்டி
  8. மிளகாய்  வற்றல் - 5
  9. தாளிக்க...
  10. எண்ணை - 2  தேக்கரண்டி
  11. கடுகு - 1 தேக்கரண்டி
  12. பச்சை  மிளகாய் - 2
  13. கறிவேப்பிலை
  14. எலுமிச்சை சாறு

வழிமுறைகள்

  1. மொச்சைக்கொட்டையை  தேவையான  உப்பு  சேர்த்து குக்கரில்  5,6 சத்தங்கள் வரவிட்டு வேகவிடவும்.
  2. வறுக்கக்  கொடுத்துள்ள சாமான்களை எண்ணையில்  வறுத்து மிக்ஸியில்  பொடி செய்யவும்.
  3. வாணலியில்  எண்ணை  சேர்த்து  கடுகு,  பச்சை மிளகாய்,  கறிவேப்பிலை   தாளித்து  அதில்  வெந்த மொச்சைக்கொட்டையைப் போட்டு  கிளறவும்.
  4. அதில்  அரைத்த தனியாபொடியைப் போட்டு,தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும்.நன்கு  கிளறி  இறக்கவும்.
  5. இந்த  சுண்டலில்    பொடியாக நறுக்கிய இஞ்சி, மாங்காய், வதக்கிய  வெங்காயம்,  துருவிய கேரட்கரம் மசாலா   சேர்த்து மசாலா சுண்டலாக செய்யலாம்.ருசி சூப்பராக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்